ஐ.நா. இலங்கையில் விசாரணை நடாத்த முடியாது! பிரேரணை 134 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை யில் விசாரணை நடாத்த முடியாது. பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது. பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைக்கு இடமளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
அரசாங்கத்திற்கு சார்பான 144 பாராளுமன்ற உறுப்பினர்களும், விசாரணைக்குழு இலங்கைக்கு வருகை தரக்கூடாது என்ற பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 10 வாக்குகள் செலுத்தப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனநாயக கட்சி உட்பட எதிர்கட்சிகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
0 comments :
Post a Comment