Monday, May 5, 2014

பிலிப்பைன்ஸில் படைகளை நிலைநிறுத்த அமெரிக்கா உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறது. By Joseph Santolan

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நான்கு நாடுகளுக்கான கடந்தவார ஆசிய பயணத்தின் முடிவில் இருநாட்கள் அரசாங்க விஜயமாக மணிலாவிற்கு வந்தார்.

ஒபாமாவின் பயணத்தின் மிகமுக்கியமான விடயம் அவர் வருவதற்கு சில மணி நேரம் முன் நடைபெற்றது; அமெரிக்காவின் பிலிப்பைன்சிற்கான தூதர் பிலிப் கோல்ட்பேர்க் மற்றும் பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு மந்திரி வோல்ரெயர் காஸ்மின் உடன் EDCA எனப்பட்ட விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். EDCA இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு பத்தாண்டுகால இராணுவ உடன்படிக்கையாகும். இது சுழற்சிமுறையில் அமெரிக்க இராணுவப்படைகள் அங்கு நிறுத்தப்படுவதையும் மற்றும் பிலிப்பைன்ஸ் முழுவதும் உள்ள படைத்தளங்களுக்கான விநியோகத்தை வழங்க அனுமதிக்கும்.

உடன்படிக்கையின் உள்ளடக்கம் இன்னும் பகிரங்கமாக்கப்படவில்லை. பிலிப்பைன்ஸ் செய்தித்தாட்கள், ஒபாமா தன் பயணத்தை முடித்துக் கொண்டபின் இது செய்தி ஊடகத்திற்கு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளன.

EDCA பற்றிய சுருக்கமான செய்தி அறிக்கை ஒன்றை பிலிப்பைன்ஸின் வெளியுறவுத்துறை ஒரு தொகை வினாக்கள் விடைகள் என்ற தொகுப்பு வடிவத்தில் தயாரித்து வெளியிட்டது. இது இந்த உடன்படிக்கையின் சில கூறுபாடுகளை கூறுகிறது.

இந்த அறிக்கை உடன்படிக்கை, அமெரிக்க படைகளின் எண்ணிக்கையிலும் மற்றும் நாட்டிற்குள் நிலைநிறுத்தப்படவுள்ள இராணுவ விநியோகங்களை பற்றி அல்லது “முன்மொழியப்பட்டவை” பற்றிய கட்டுப்பாடு எதையும் வைக்கவில்லை. இந்த முன்மொழியப்பட்ட விநியோகங்களில் அமெரிக்க போர்விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள் ஆகியவை அடங்கும். நிலைநிறுத்தப்படும் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை மாறுபடும், ஆனால் ஒரே நேரத்தில் நாட்டில் எவ்வளவு நிலைநிறுத்தப்படுலாம் என்பதிற்கு வரம்பு ஏதும் இல்லை.

இந்த உடன்பாடு இப்படைகள் எங்கு நிறுத்தப்படும் என்று குறிக்கவில்லை. எனவே தற்போதுள்ள அனைத்து பிலிப்பைன்ஸ் இராணுவ இருப்பிடங்களும் அதில் உள்ளடங்கும் சாத்தியம் உள்ளது. ஒபாமாவுடன் பயணிக்கும் மூத்த அமெரிக்க தேசிய பாதுகாப்புக்குழு அதிகாரி ஈவான் மெடைரோஸ், முன்னாள் பாரிய அமெரிக்க கடற்படைத்தளமான சூபிக் விரிகுடா EDCA யின் கீழ் அடங்கியிருக்கலாம் என்று நேற்று தெரிவித்தார்.

உடன்படிக்கையின்கீழ், வாஷிங்டன் பிலிப்பைன்ஸில் புதிய படைத்தள வசதிகள் கட்டமைப்பதிலும் ஈடுபடும். மேலதிக தளங்கள் கட்டப்படவுள்ளவற்றில், பாலவான் தீவிலுள்ள ஓயெஸ்டர் வளைகுடாவும் அடங்கும். இது தென்சீனக் கடலின் பிரச்சினைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 60 மைலுக்குள்தான் இருக்கின்றது.

அமெரிக்க இராணுவத்தால் கட்டப்படும் அல்லது ஆக்கிரமிக்கும் முகாம்களின் உரிமையை பிலிப்பைன்ஸ் தக்க வைத்துக் கொண்டாலும், இவை உடன்படிக்கை காலம் முழுவதும் அமெரிக்க கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும். இது ஒவ்வொரு பத்தாண்டுகால முடிவிலும் புதுப்பிக்கப்படும். “உடன்படிக்கையின்படி இருதரப்பினருக்கும் கிடைக்கும் பரஸ்பர நலன்களை ஒட்டி” எந்தவொரு முகாம்களுக்கும் வாஷிங்டன் வாடகை தராது என்று பாதுகாப்புத் துறை செயலர் காஸ்மன் கூறியுள்ளார்.

EDCA இயற்றுவதில், மணிலாவுக்கும் வாஷிங்டனுக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அமெரிக்க தளங்களை பிலிப்பைன்ஸ் பயன்படுத்திக்கொள்வதாகும். ஜனாதிபதி பெனிக்னோ அக்வினோ நிர்வாகத்திற்கு அமெரிக்க முகாம்களை அணுகும் முழுஉரிமை பிலிப்பினீயர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது என்று கூறியது.

ஆனால் EDCA அறிக்கை உண்மையில் கூறுவது ஒரு பிலிப்பீனிய படைத்தள தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி அமெரிக்க தளங்களை முழுமையாக பயன்படுத்தலாம் என்பதாகும். இவை நடைமுறையில் அமெரிக்க படையினர் மட்டும் அணுகுவதற்கும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அமெரிக்க தளங்களாக செயல்படும். இதற்கான சேவைகள் பிலிப்பைன்ஸ் படைகளால் நடாத்தப்படும். அவை படகு மூலம் விநியோகங்களை கொண்டுவருவதுடன், அவர்களது எல்லைகளை பாதுகாப்பர்.

ஆகஸ்ட் 2013ல் அடிப்படை உடன்பாட்டை மேற்கொள்ள பேச்சுக்கள் Increased Rotational Presence என்ற பெயரில் ஆரம்பித்தன. பேச்சுவார்த்தைகளின் இறுதி விளைவு நிறைவேற்று உடன்பாடு என கூறப்படுகிறதே அன்றி இராணுவ உடன்பாடு எனக்கூறப்படவில்லை. இது பிலிப்பைன் அரசியலமைப்பின் விதி 18, பிரிவு 25 ஐ அதிகாரமற்றதாக்குவதாகும். அவ்விதியின்படி செனட் ஒப்புதல் கொடுக்கும்வரை எந்த வெளிநாட்டுத் துருப்புக்களும் நாட்டினுள் அனுமதிக்கப்படக்கூடாது என்று உள்ளது.

எட்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்பொழுது வாஷிங்டன் அதன் திட்டத்திற்கு இசைவுபெற வலிமை மற்றும் அச்சுறுத்தல் தந்திரோபாயங்களை பயன்படுத்தியது. அக்டோபரில், அமெரிக்க அரசாங்கம் மூடப்பட்டபோது ஒபாமா ASEAN உச்சிமாநாட்டில் பங்குபெறவில்லை என்ற நிலையில், அடிப்படை உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளும் நின்றுபோயின.

Haiyan சூறாவளி பேரழிவிற்குப்பின் தான் கொடுத்த உதவியைப் பயன்படுத்தி பிலிப்பைனின் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் மீண்டும் அமெரிக்கா தான் நிறுவிய விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைத்தது. வெள்ளை மாளிகை வெளிவிவகாரத்துறையின் உளவுத்துறை பிரிவின் முக்கிய நபரான பிலிப் கோல்ட்பேர்க்கை பிலிப்பைன்ஸின் புதிய அமெரிக்க தூதராக அனுப்பியது.

இந்த ஆண்டு பெப்பிரவரியில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் வெடித்தபோது, ஜனாதிபதி அக்வினோ தன்னுடைய முக்கிய பேச்சுவார்த்தை நடத்துபவர்களில் ஒருவரான வெளியுறவு துணைச் செயலர் கார்லோஸ் கிங் சோரெட்டாவை பதவி நீக்கம் செய்தார். அவர் அமெரிக்கத் தளங்கள் மீது பிலிப்பைனின் தெளிவான கட்டுப்பாடு வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதேகாலத்தில் அக்வினோ தன் நடைமுறைக்கு புறம்பாகச் சென்று உடன்பாட்டை சட்டமன்றத்தில் எதிர்க்கும் திறனுடைய எதிர்ப்பாளர்களை மௌனமாக்க முயன்றார். அக்வினோவின் தாராளவாதக் கட்சிக்கு எதிராக முதலாளித்துவ கூட்டில் இருக்கும் செனட்டர்களான யுவான் பொன்ஸ் என்றிலே,ஜின்கொகி எஸ்ராடா, ராமோன் றெவில்லா ஆகிய தலைவர்கள் சென்ற ஆண்டு அடிப்படைப் பேச்சுவார்த்தைகள் முதல் கட்டங்களில் இருக்கும்போது தங்கள் தயக்கத்தை வெளியிட்டனர். அவர்கள் தமக்கு சாதகமான விதிமுறைகளுக்கு வாஷிங்டனுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர்.

சில வாரங்களுக்குள் இந்த மூன்று செனட்டர்களுக்கும் எதிராக ஊழல் அம்பலம் வெளிப்பட்டது. ஏப்ரல் ஆரம்பத்தில் கொள்ளையடித்த குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது. கொள்ளைக் குற்றச்சாட்டு குறைந்தபட்சம் ஆயுட்கால சிறைவாசத்தை கொடுக்கும்.

வாஷிங்டன் பிலிப்பைன்ஸில் அமெரிக்கப் படைகளை நிலைகொள்ள செய்வது ஆசியாவை “நோக்கி திரும்புதல்” எனப்படுவதின் ஒரு பகுதியாக இராணுவரீதியாக சீனாவை சூழும் அதன் உந்துதலில் முக்கிய படியாக கருதுகின்றது.

திங்களன்று ஜனாதிபதியின் மாலாகானாங் அரண்மனையில் நிகழ்த்திய உரையில் ஒபாமா இதை மறுத்து “நான் மிகவும் தெளிவாக கூற விரும்புகிறேன். அமெரிக்க பழைய தளங்களை மீட்கவோ, புதிய தளங்களைக் கட்டவோ முயற்சிக்கவில்லை.” அவர் தொடர்ந்தார்: “எங்கள் இலக்கு சீனாவை எதிர்ப்பது அல்ல. எங்கள் எதிர்ப்பு சீனாவை கட்டுப்படுத்துவது அல்ல.... எங்கள் இலக்கு சர்வதேச விதிகளும் நெறிகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதாகும். அதில் கடற்பகுதி முரண்பாடுகளும் அடங்கும்.”

“சர்வதேச விதிகள், நெறிகள்” பற்றி குறிப்பிடுவது மணிலா ஐக்கிய நாடுகளின் சர்வதேச கடல் சட்ட நீதிமன்றத்தில் (ITLOS) பதிந்த வழக்கினை பற்றிய தெளிவான குறிப்பு ஆகும். பெய்ஜிங் தென் சீனக்கடலில் உரிமைகோருவது பற்றிய பிரச்சனை தொடர்பான மணிலாவின் வழக்கு அமெரிக்காவில் எழுதப்பட்டு அமெரிக்க வக்கீல்களால் வாதிடப்படுகிறது. அமெரிக்க வெளிவிவகாரத்துறை இந்த வழக்கை சீனாவின் பிராந்திய உரிமைகோரலை செல்லாமல் ஆக்குவதற்கு உத்தியோகபூர்வ வழிவகை எனக் காண்கிறது.

இது தொடர்பாக அவர் “ஜனாதிபதி பெனிக்னோவின் அணுகுமுறையான கடல் சட்டத்திற்கான நீதிமன்றத்திற்கு செல்லுதல், சர்வதேச தீர்ப்பை நாடுதல், இராஜதந்திர முறையில் இதைத்தீர்த்தல் என்பதற்கு” ஒபாமா வெளிப்படையான ஆதரவைக் கொடுத்தார்.

இப்பிராந்தியத்தில் சீனாவை ஆக்கிரமிப்பாளனாக ஒபாமா விவரித்து, சீனாவிற்கு மாறாக “நாங்கள் (அமெரிக்கா) கப்பல்களை எல்லா இடங்களுக்கும் அனுப்புவதில்லை மக்களை அச்சுறுத்துவதும் இல்லை.” என்றார்.

இதைத்தான் வாஷிங்டன் துல்லியமாகச் செய்கிறது.

வாஷிங்டன் “கப்பல்களை” அனுப்புகிறது, மக்களை அச்சறுத்துகிறது என்பது ஒரு கட்டுரையில் மிகவும் தெளிவாக்கப்பட்டது. “ஆசியாவில் தனது கூட்டினருக்கு ஒபாமா உத்தரவாதம் கொடுக்கையில், அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இராணுவரீதியான தேர்வை விரைவுபடுத்துகிறது” என்று வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் பிலிப்பைன்ஸிற்கு ஒபாமா வந்த அன்று வெளியிட்ட கட்டுரையில் கூறுகின்றது.

இக்கட்டுரை பல பெயரிடப்படாத உயர்மட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் நடத்திய பேட்டிகளை தளம் கொண்டுள்ளது. அதிகாரிகள் வாஷிங்டன் அதன் பசிபிக் கட்டுப்பாட்டு தலைமையகத்தின் மூலம் சீனாவுடன் அணுகும் திருத்தப்பட்ட விருப்புரிமைகளை இயற்றியுள்ளனர் என்று கூறினர். அவை இன்னும் “பலத்தையும் கடுமையையும்” கொண்டதாக இருக்கும் என்று அவர்கள் குணாதிசயப்படுத்தியுள்ளனர்.

வாஷிங்டன் “அமெரிக்கா கடந்த காலத்தில் கொண்டதை விட சீனாவின் கூற்றுக்களை பற்றி இன்னும் நேரடியான சவாலை கொண்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளது. இந்த நேரடிச் சவால் “பெருகிய முறையில் சீனாவிற்கு அருகே கண்காணிப்பு செயற்பாடுகள் அதிகரிப்பு” வடிவத்தை எடுக்கும். இன்னும் அதிகளவு அமெரிக்கக் கப்பல்கள் துறைமுகங்களுக்கு வரும், அமெரிக்க விமானங்கள் பிரச்சனைக்குட்பட்ட சீனக்கடலோரத்திற்கு அருகேயுள்ள தைவான் ஜலசந்தி உட்பட நீர்நிலைகள் வழியே அனுப்பப்படும்.

புதிய அடித்தள உடன்படிக்கையின் கீழ், பிலிப்பைன்ஸ் இத்தகைய ஆத்திரமூட்டல் மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் இன்னும் நெருக்கமாக ஈடுபடும். EDCA அமெரிக்க காலனித்துவ வகையிலான கட்டுப்பாட்டை நாட்டின் மீது மீண்டும் உருவாக்கப்படும் திசையில் ஒரு பெரிய அடியாகவும், சீனாவுடனான போருக்கான வாஷிங்டனுடைய உந்துதலின் முக்கிய கூறுபாடாகவும் இருக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com