Sunday, May 11, 2014

ஒன்றைத் தவிர்த்து ஏனைய அனைத்து ஜெனீவா பிரேரணைகளையும் நிறைவேற்றுவேன்! - மகிந்தர்

சர்வதேச விசாரணை ஒன்றினைத் தவிர்த்து, ஜெனீவா மனித உரிமைகள் பிரேரணைகள் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டதாக பீபீஸீ செய்திச் சேவை அறிவித்துள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி பதிவாகியுள்ளது.

அதில்,

ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் தொடர்பிலான பாராளுமன்ற பிரதியமைச்சர் ஸேஜி கிஹரா (Seiji Kihara) சந்தித்த வேளையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சென்ற மார்ச் மாதம் ஜெனீவா தலைநகரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில், இலங்கை தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பிரேரணைகள் பற்றி தெளிவுறுத்தியுள்ள ஜனாதிபதியின் ஊடப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பிரேரணை இலங்கைக்கு தீமை விளைவிக்குமா என ஜப்பான் அரசு மீளாய்வு செய்த்தாகவும், அது இலங்கைக்கு தீமை விளைவிக்கும் என்பது அவர்களது தீர்மானம் எனவும் ஜப்பானின் வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஸெய்ரி கிஹாரா குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, ஜெனீவா மனித உரிமைச் சபை முன்வைத்துள்ள பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்துகொள்ள ஜப்பான் முடிவு செய்தாக ஜப்பானின் வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com