Sunday, May 11, 2014

குறுகிய கால அபிவிருத்தியின் ஊடாக வடபகுதி மக்கள் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர் - இந்திய வெ.அ.- சுசித் ராஜதுரை

குறுகிய காலத்தில் அரசாங்கம் வடபகுதி மக்களுக்கு வழங்கி பாரிய அபிவிருத்திகள் ஊடாக அம்மக்கள் சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக இந்திய வெளியியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் எம். சுசித் ராஜதுரை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இணைச் செயலாளர் எம்.சுசித் ராஜதுரை யாழ்ப்பாணத்தில் வைத்து வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார்.

வட பகுதி மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தமது பணிகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் இனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள சக வாழ்வை மேலும் வளப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாகவும் திருமதி ராஜதுரை மேலும் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தற்போதைய அமைதிச் சூழல் தொடர்பாகவும் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி திருமதி ராஜதுரைக்கு தெளிவுப்படுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com