சவுதியில் சிலின்டர் வெடித்து இலங்கைப்பெண் பலி!
சவுதி அரேபியாவில் ரியாத் பகுதியில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற சிலின்டர் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 38 வயதுடைய பாதிமா சபாயா என்ற இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார். கேஸ் சிலின்டர் வெடித்து கோமா நிலையில் கிங் சவுத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார்.
பாதிமா சபாயாவின் ஜனாசா நல்லடக்கத்தில் பங்குகொள்ள அவரது சகோதரர் ஜெத்தாவில் இருந்து தூதரக உதவியுடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாயா கடந்த 15 மாதங்களாக சவுதியில் தொழில் புரிந்து வந்துள்ளார்.
பாதிமா சபாயாவின் ஜனாசாவை ரியாத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment