Monday, May 12, 2014

இலங்கையின் முதலாவது மெழுகுச் சிலை நூதனசாலை !! (படங்கள்)

இலங்கையின் முதலாவது மெழுகுச் சிலைக கண்காட்சி கொழும்பு 7 இலுள்ள தேசிய கலாபவனத்தில் தற்போது நடைபெறுகிறது. இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்களான, மாலினி பொன்சேகா, டபிள்யூ.டி. அமரதேவ, ரவீந்திர ரந்தெனிய, விக்டர் ரத்நயாக்க, சுனில் எதிரிசிங்க, மஹேந்திர பெரேரா, மற்றும் புகழ்பெற்ற பேராசிரியர்களான கார்லோ பொன்சேகா, சுனில் ஆரியரத்ன ஆகியோருடன் இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிர மராஜசிங்கன், கெப்பித்திபொல நிலமே, எஹெலபொல குமாரிஹாமி, சே குவேரா, புரூஸ் லீ உட்பட பலரின் சிலைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் முதலாவது ஒரேயொரு மெழுகு சிலை நூதனசாலையான ஆத்மா மெழுகு சிலை நூதனசாலையின் (Atma Wax Museum) சிற்பக் கலைஞர்களான அத்துல ஹேரத், அவரின் புதல்வர் மஹிம ஹேரத் ஆகியோர் இந்த மெழுகு சிலைகளை நிர்மாணித்துள்ளனர். உயிருள்ள நபர்கள் கண் முன்னே காணப்படுகிறார்களோ என எண்ணவைக்கும் அளவுக்கு இச்சிலைகள் உயிரோட்டமாக காணப்படுகின்றன.

இக்கண்காட்சியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் இக்காட்சி நிறைவடையவிருந்தபோதிலும் பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் வியாழக்கிழமை வரை இக்கண்காட்சி நீடிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை இக்காட்சியை பார்வையிடலாம்.


















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com