பி.பீ.ஜயசுந்தர பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்!!
நிதியமைச்சு, திறைச்சேரி மற்றும் பொருளாதார அபிவி ருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி யிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருடைய வெற்றிட த்திற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சராக இருக்கின்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு கூடுதலான நிதியொதுக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுளிலிருந்து விடுவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதியமைச்சு,திறைச்சேரி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவிற்கு எதிராக அமைச்சர் விமல் வீரவங்ச குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment