பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!! தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள்!
ஒருவாரத்திற்கு உன்னை வெலிகமவிற்கு அனுப்புவேன்' என்று கூறியே என்மீது தாக்குதல் நடத்தினர் - தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ்!
களுத்துறை, தொடம்கொட பொம்புவல இறப்பர் தோட்ட த்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவினரை கைது செய்வதற்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தனார்.
தொடம்கொட பகுதியில் வைத்தே இனந்தெரியாத குழுவினர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நேற்றிரவு 8 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதுடன் அவருடைய காரையும் தீ மூட்டி எரித்துள்ளனர். துப்பாக்கிப்பிரயோகத்தினால் அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்பட்வில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவாரத்திற்கு உன்னை வெலிகமவிற்கு அனுப்புவேன்' என்று கூறியே தன்மீது அக்குழுவினர் தாக்குதல் நடத்தியதாக காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளதுடன் அக்குழுவில் தெற்கை சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவரும் இருந்ததாக கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்; கொட்டாவை காவலரணில் கடமையாற்றிவரும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரே தாக்குதலில் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கூடுதலான வேகத்தில் வாகனத்தை செலுத்தியமைக்காக இந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர தண்ட பற்றுச்சீட்டை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே அந்த அரசியல்வாதிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் அண்மையில் வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment