தமிழர்கள் இன்று நிம்மதியாகப் பெருமூச்சு விடுவதைச் சகிக்க முடியாது மோடியுடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போகிறதோ தமிழ் தேசிய கூட்டமைப்பு?
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜயலலிதா ஜயராமுடன் நெருக்கமான நட்பு கொண்டிருப்பதனால், இலங்கை வாழ் தமிழர்களுக்கும் நன்மை பயக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. அதனால் இந்திய புதிய பிரதமரைச் சந்தித்து, இலங்கையில் நிலவும் தேசிய பிரச்சினை பற்றி கலந்துரையாடவுள்ளதாகவும், அக்கட்சி வெற்றியீட்டி அதிகாரத்திற்கு வந்திருப்பதனால் இலங்கை சார் பிரச்சினை அவர் உதவுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக்காக அவர் அங்கத்துவம் வகித்த இந்திய காங்கிரஸ் கட்சி இந்நாட்டு தமிழர்கள் விடயத்தில் கரிசனை காட்டுவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளபோதும், அவரது பேச்சில் உப்புச் சப்பில்லை எனவும், தான் வயிறு வளர்ப்பதற்காகவே அரசியல் செய்கிறார் எனவும், இந்நாட்டுப் பிரச்சினையை இந்நாட்டில் தீர்த்துக் கொள்ளாமல், இலங்கையில் இருந்து கொண்டு இலங்கைக்கு அநியாயம் செய்வதற்கான மனநிலையிலேயே என்றும் இருக்கின்றனார் எனவும் தமிழர்களில் பலரும் அவரைச் சாடுகின்றனர்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற பச்சோந்திகளால் இலங்கையில் தற்போது தாம் நிம்மதியாக இருக்கின்ற நிலைமையும் பறிபோய் விடுமோ என தமிழர்களில் பெரும்பாலானோர் கொதிக்கின்றமையும் சுட்டிக்காட்டத் தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment