காட்டை இரண்டாகப் பிரித்து நிர்மாணிக்கப்படும் அதிவேக பாதை வேண்டவே வேண்டாம்!
தெற்கு அதிவேக பாதையை ஹம்பாந்தோட்டை வரை நீட்டிச் செல்லும்போது, தந்தெனிய அபரெக்க ஈரலிப்பு வலய மழைக் காடு இரண்டாக பிரிபடும் வண்ணம் பாதை அமைக்க வேண்டாம் என சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் வினவப்பட்டபோது, அதற்கு விடையளித்த சூழலியல் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், காடு இரண்டு படும் வண்ணம் பாதை நிர்மாணிக்க்க் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்யும்போது அதற்கான செலவினம் அதிகாரித்தாலும், சூழலுக்கு ஏற்படும் அசௌகரியத்தை நீக்குவது அதை விட மேலானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
1 comments :
பாலம் போன்று உயரமாக காட்டின் மேலாக அமைக்க முடியும், இது பயனிப்பவற்களுக்கும் அருமையான இயற்க்கை காட்சியை தரும்.
Post a Comment