விமலார் எங்கே…? “கோல்” எடுத்தால் பதிலில்லையே…. வினவுகிறார் மகிந்தர்…
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு பலமுறை தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட போதும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
அநுராதபுரவுக்கு சுற்றுலாவொன்று மேற்கொண்டிருந்தபோது, இடையில் தேசிய சுதந்திர முன்னணியின் பிரதி அமைச்சர் வீரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி சந்தித்தபோதே அவரிடம் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எங்கே உங்களது பெரியவர்? நான் மூன்று நாட்களாக முயற்சி செய்கிறேன்…அவருடன் கதைக்க… எப்படிக் கதைப்பது? குறைந்தளவு அழைப்பினை மேற்கொண்டால் அதற்கேனும் பதில் தருகின்றார் இல்லையே! அவர் எங்குதான் இருக்கின்றார்? என ஜனாதிபதி கேட்டபோது, வெகுவிரைவில் கட்சியின் புதுக் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் சுமந்து அமைச்சர் விமல் வீரவன்ச உங்களைச் சந்திக்க வருவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment