ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக சோடிக்கப்பட்ட கதையில் எவ்வித உண்மையும் இல்லை! - மதுலுவே சோபித்த தேரர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் உத்தேசங்கள் எதுவும் தமக்குக் கிடையாது என கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல இனங்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என சுட்டிக்காட்டியுள்ள அவர், மதப் பயங்கரவாத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெளிவுறுத்துகின்றார்.
எது எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் பேச்சுவார்த்தைகளில் தான் பங்களிப்பு வழங்கி வருவதாகவும், தற்போதைய முறைமைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment