யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடந்த அதிசயம்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த யாத்திரீகர்கள்!!
கதிர்காமத்திற்கான பாதயாத்திரையில் கொண்டு செல்லப்படும் வெண்கலவேல் பூஜைக்காக யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைக்கப்பட்டு காலையில் வெளியில் எடுத்தபோது வெள்ளி வேலாக மாறியிருந்தது. இவ் வதிசயம் அற்புதம் பாதயாத்திரை தொடங்கிய கடந்த சனிக் கிழமையன்று காலை சந்நிதி சந்நிதானத்தில் இடம்பெற்று ள்ளது. இவ்வற்புதத்தால் பாத யாத்திரையின் தலைவர் வேல்சாமி தொடக்கம் யாத்திரீகர்கள் குழுமியிருந்தோர் பிரமிப்பில் உறைந்துபோனார்கள். சந்நிதியானின் அற்புதத்தால் அனைவரும் ஆனந்தமடைந்தனர். இது தொடர்பில் தலைவர் வேல்சாமி தெரிவிக்கையில்..
நாம் பாதயாத்திரையை இம்மாதம் 29ம் திகதி ஆரம்பிப்பதாக இருந்தோம். சடுதியாக கதிர்காம நிர்வாகம் கொடியேற்றம் மற்றும் தீர்த்த திகதிகளை அறிவித்ததை எமது கல்வியியலாளர் சகா அவர்கள் என்னிடம் தெரிவித்தறகு அமைவாக உடனடியாக பாதயாத்திரையை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.
அதற்காக காரைதீவிலிருந்து கடந்த 15 வருடங்களாக கதிர்காம பாதயாத்திரையில் கொண்டுசெல்லப்படும் வழமையான வெண்கல வேலுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்தேன். அன்றிரவு செல்வச்சந்நிதி ஆலய மூலஸ்தானத்தில் வேலை பூஜைக்காகவும் முருகனின் ஆசிக்காகவும் வழமைப்பிரகாரம் வைத்தோம்.
வைத்துவிட்டு வெளியேறும்போது சந்நிதி ஆலய முன்றலில் வழமையாக இருக்கும் வெள்ளிவேல் இருந்தது. அதைப்பார்த்து இப்படியொரு வேல் இருந்தால் நன்றாக இருக்குமே முருகர் அருள்வாயா? என்றெண்ணியபடி தூக்கத்திற்கு போய்விட்டேன். தூக்கத்திலும் முருகனிடம் வெள்ளிவேலிருந்தால் நன்றாக இருக்குமே. எனக்கு அருள்வாயா என்றபடி தூங்கிவிட்டேன். காலையில் அடியார்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். பூஜையும் நடந்தது. பூஜை முடிந்ததும் ஆலய குருக்கள் வேலைத்தூக்கிவரும்போது பார்த்தேன். என்னையே நம்பமுடியாமல் போய்விட்டது. நான் காண்பது கனவா நிஜமா என்று பிரமித்துப்போனேன்.
நான் இரவு பூராக முருகனிம் கேட்ட வெள்ளி வேலே அது. சந்நிதியானின் அற்புதத்தை நினைந்து சற்றுநேரம் கண்ணீர் மல்க வாயடைத்துநின்றேன். சகலரும் என்ன நடந்தது என்று கேட்டார்கள். ஏனையோரிடம் விடயத்தைச் சொன்னதும்தான் அவர்களும் ஆச்சரியத்தில் உறைந்துபோனார்கள்.
எமது பாதயாத்திரைக்கான முருகனின் அங்கீகாரமாக இதனைக் கருதுகின்றேன். முருகனின் அருள் சகலருக்கும் கிடைப்பதாக என்றார்.
0 comments :
Post a Comment