யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுவனின் சிகிச்சையில் நடந்த குழறுபடி(வீடியோ) !!
யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஜெயரட்ணம் அவர்கள் பதினொரு வயதுச் சிறுவனை தனது கவலையீனத்தால் 3 முறை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளார். கடவுளாக நினைத்து வைத்தியர்களிடம் வரும் நோயாளர்களை தங்களது கவலையீனத்தால் கொலை செய்யும் நிகழ்வுகளும் தவறான வைத்திய சிகிச்சை அளிக்கும் நிகழ்வுகளும் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. வயிற்றுவலியால் துடித்த கிரிசாந் என்ற குறித்த சிறுவனை உள்ளூர் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.
உள்ளூர் மருத்துவரின் ஆலோசனைப்படி பின்னர் அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் குறித்த சிறுவன் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர் ஜெயரட்ணம் குறித்த சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு ள்ளார்.பின்னர் சிறிது நாட்கள் வார்டில் இருந்து பின்னர் துண்டு வெட்டி விடப்பட்டுள்ளார். ஆனால், வீட்டுக்கு வந்து சில நாட்களில் குறித்த சிறுவனின் அறுவைச் சிகிச்சை செய்த வயிற்றுப் பக்கம் வீங்கிக் கொண்டு வந்துள்ளது. திரும்பவும் பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது அங்கே நூல் இருக்கிறது. திரும்பவும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திரும்ப 2 ஆவது தடவையும் அறுவைச் சிகிச்சை செய்து முடிந்துள்ளது. வழமை போல் திரும்பவும் சிறுவன் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், திரும்பவும் வயிற்றுப் பகுதியில் வீங்கி வந்துள்ளது.3 ஆவது தடவையும் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது திரும்பவும் வயிற்றில் நூல் இருக்கிறது. 3 ஆவது தடவையாகவும் அறுவைச் சிகிச்சை செய்து பார்க்க வேண்டும் என்று வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது சிறுவனின் வயிற்றுப் பகுதி வீங்கி இருப்பதுடன் இரத்தமும் வடிகிறது. இடையிடையே வலியாலும் துடிக்கிறான் சிறுவன். வரும் புதன்கிழமை 28.05.2014 அன்று திரும்பவும் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு நாள் குறித்து அனுப்பி இருக்கிறார்கள் மருத்துவர்கள்.
1 comments :
The careless doctors like jayaratnam has to go out from the medical profession rather than killing the innocent patients.
Post a Comment