78,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமைக்கு காரணமாகவிருந்த கே.பியை உடன் விசாரிக்கவேண்டும்!
78,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமைக்கு காரணமாகவிருந்த கே.பியை கேபியை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று பிரதான எதிர் கட்சியான ஐஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரினார்.
ஐக்கிய தேசிய கட்சி நேற்று சமர்ப்பித்த அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கே.பி என்பவர் ஓகஸ்ட் 2009 இல் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். மே 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் முன்னர் இவர் விடுதலைப் புலிகளின் பிரதான ஆயுத கொள்வனவாளராக இருந்தார். இன்று அரசாங்கம் மௌனமாக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்
0 comments :
Post a Comment