பங்களாதேஷின் 2 யுத்த கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!
பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான ஹலி ஹைதர் மற்றும் நீர்முள் எனும் 2 யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வளர்க்கும் நோக்கில் வருகை தந்துள்ள இவ்விரண்டு கப்பல்களையும் இலங்கை கடற்படை வரவேற்றது. கப்பல்களின் மாலுமிகள் மேற்கு கடற்படை நிறைவேற்று கட்டளை தளபதி ரியல் எட்மிரல் சிரிமெவன் ரணசிங்கவை சந்தித்து நட்புறவு ரீதியாக உரையாடினர். நினைவு சின்னங்களும் பரிமாறப்பட்டன.
0 comments :
Post a Comment