ஆசிரியையின் அட்டகாசம்.. அடுத்த 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் குயில்வத்தை தோட்டத்தில் 16வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று 08.05.2014 அன்று மாலை 4.30 மணியளிவில் இடம் பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். 16வயதான புஸ்பநாதன் சாரதா என்ற சிறுமியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வட்டவளை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி குயில்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி கற்று வருவதோடு 08.05.2014 அன்றைய தினம் பாடசாலை விட்டு வந்து மாலை நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் சடலம் வட்டவளை வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்பட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த சிறுமியால் எழுதபட்டிருந்த கடிதம் ஒன்றையும் வட்டவளை பொலிஸார் மீட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி பாடவேளையின் போது தாள் ஒன்றில் பாடல் எழுதி கொண்டிருந்ததாகவும் அதனை இணங்கன்ட ஆசிரியர் ஒருவர் இதனை செய்யவேண்டாம் நீ சென்று நாளை பாடசாலைக்கு வரும்போது உங்கள் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வரும்படி ஆசிரியர் கூறி இருந்ததாகவும் இதற்கு என்னை எனது நண்பர்கள் கேலிசெய்ததாகவும் இதன் காரணமாக எனக்கு மனசங்கடம் ஏற்பட்டதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறித்த சிறுமி தன் கையெழுத்து மூலமாக எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதே வேலை சிறுமியின் தந்தை புஸ்பநாதனிடம் நாம் கேட்டபோது நானும் எனது மனைவியும் 08.05.2014 அன்று மாலை விறகு சேகரிப்பதற்காக சென்று இருந்தோம். விறகு சேகரித்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது தான் எனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டால்.
ஆனால் எங்கள் குடும்பத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென குறித்த சிறுமியின் தந்தை புஸ்பநாதன் தெரிவித்தார். இதே வேளை குறித்த ஆசிரியையை நாம் சந்திப்பதற்காக பாடசாலைக்கு சென்று இருந்த வேலை ஆசிரியர் விடுமுறை பெற்று சென்றுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் நடராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment