தந்தை, சகோதரர் மற்றும் காதலனால் சிதைக்கப்பட்ட 13 வயது சிறுமி! சந்தேக நபர்கள் மூவரும் கைது!
தந்தை, சகோதரர் மற்றும் காதலனால் 13 வயது சிறுமியொருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் வனாத்தவில்லுவில் இடம்பெற்றுள்ளது. 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சகோதரர் மற்றும் காதலன் என தெரியவருகிறது. வனாத்தவில்லு - காட்டுபுலியங்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி பாடசாலை செல்வதாகவும் தாய் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணையின்படி முதலில் 2010ம் ஆண்டு குறித்த சிறுமி தனது சகோதரனால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்பின் தந்தை தொடர்ச்சியாக சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ஒரு ஆணை காதலித்ததாகவும் அவரும் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியாகவும் சிறுமி பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்கென புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
0 comments :
Post a Comment