Monday, May 5, 2014

மாயமான மலேசிய விமானமும், மலேசியாவில் கைதான 11 தீவிரவாத சந்தேக நபர்களும்!

மாயமான மலேசிய விமானம் தொடர்பான புலனாய்வில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு புலனாய்வாளர்கள், கடந்த சில நாட்களுக்குள் மலேசியாவில் கைது செய்யப்பட்ட 11 தீவிரவாத சந்தேக நபர்கள் பற்றிய முழு விபரங்களையும் கோருகின்றனர். இந்த 11 தீவிரவாத சந்தேக நபர்களுக்கு, மாயமான மலேசிய விமான விவகாரத்திலும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறார்களாம், புலனாய்வாளர்கள்.

அமெரிக்க டிஜிட்டல் மீடியா ஒன்று வெளியிட்ட இந்த தகவல், தற்போது பல சர்வதேச மீடியாக்களில் இடம்பெற்றுள்ளது. மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரி ஒருவரை கோட் பண்ணியே, அந்த செய்தி வெளியாகியிருந்தது.

premium-id இதற்கு மலேசிய தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு வரவில்லை. (சீக்கிரம் மறுப்பு வரும். அதன்பின் சில நாட்கள் கழிந்ததும், உண்மை என்று ஒப்புக்கொள்வார்கள் என்பதுதான் வழமை)

மலேசிய விமானம் மாயமாக மறைந்த பின்னணியில், தீவிரவாத நடவடிக்கை இருக்கலாம் என்ற வியூபாயின்ட் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. அதற்கும் ஒரு சந்தர்ப்பம் உள்ளதாகவே வெளிநாட்டு புலனாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில், மலேசியாவுக்குள் புதிய தீவிரவாத இயக்கம் ஒன்று அல்-காய்தா தொடர்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு, 11 பேர் கடந்த சில தினங்களுக்குள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 22 வயது முதல், 55 வயதானவர்கள் வரை உள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் என்று தெரிகிறது. மற்றொருவர், மலேசிய மாணவர் அமைப்பான ‘சாம்’ (SAMM – Solidariti Anak Muda Malaysia) உறுப்பினர்.

இவர்கள் புதிய தீவிரவாத அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் எனவும், இதற்குமுன் மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தீவிரவாத சந்தேக நபர், யாசித் ஸூஃபாட்டுடன் இவர்களுக்கு தொடர்பு இருந்தது எனவும், கூறப்படுகிறது.

ஆனால், மற்றொரு விஷயம். இந்த 11 பேரும் கடந்த சில நாட்களுக்குள் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டது, மாயமான மலேசிய விமானம் தொடர்பாக அல்ல. சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில், சிரிய ஜனாதிபதியின் பக்கத்தில் இணைந்து யுத்தம் புரிய மலேசியாவில் இயக்கம் தொடங்கினார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை, மாயமான மலேசிய விமான புலனாய்வு பக்கம் திருப்ப போகிறார்கள் போலிருக்கிறது!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com