Friday, April 11, 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட வேண்டும்! - உதய கம்மன்பில

பயங்காரவாதக் குழுக்களைத் தடைசெய்த போதும், அதன் அரசியல் கட்சியை தடைசெய்யாத - உலகில் ஒரேநாடு இலங்கையே!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டாயம் தடை செய்ய வேண்டும் எனவும், பயங்காரவ ஆயுதக் குழுவைத் தடைசெய்த போதும் அதன் அரசியல் பிரிவை இதுவரை தடைசெய்யாத உலகிலுள்ள ஒரே நாடு இலங்கை எனவும், மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று (10) பத்தரமுல்லை ஜாதிக்க ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது -

“தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டாயம் தடை செய்ய வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது புலிகளின் அரசியல் பிரிவாகும். சம்பந்தன் அந்நாட்களில் வன்னிக் காட்டில் புலிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பூனை போல சொன்னதையெல்லாம் செய்துவந்தவர். இவ்விடயத்தை இன்று எல்லோரும் மறந்துவிட்டார்கள்.

ஆயுதக் குழுவைத் தோல்வியுறச் செய்துவிட்டு, அதன் அரசியல் பிரிவை தடைசெய்யாத ஒரே நாடு இலங்கையாகும். அதனாற்றான் இன்று ஆனந்தி போன்ற புலிப் பயங்கரவாத அமைப்பின் பிரபல தலைவர்களின் மனைவிமார் மக்கள் பிரதிநிதிகளாக மாறி இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்.

ஜனநாயகக் சுற்றுப் புறச் சூழலைக் கொண்ட எந்த நாட்டில்தான் பயங்கரவாதியை தடைசெய்தபின்னரும் அவர்களது மனைவிமார் அதனைத் தொடர்ந்தார்கள்? இதனால் சர்வதேச அழுத்தத்தைச் சந்தித்துள்ள இந்நேரத்தில் பயங்கரவாத அமைப்பு்க்கள் அனைத்தையும் தேடிப்பார்த்து அவற்றைக் கிள்ளியெறிவதற்கு அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும். அவ்வாறு செயற்படுவர்களைக் கண்டு தண்டிப்பதற்காக ஒரு சபையை நியமிக்க வேண்டும் என இலங்கை வாழ் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கருத்துரைக்கும்போது -

“எல்.ரீ.ரீ என்ற மரத்தை முழுமையாக வெட்டிச் சாய்ப்பதற்குப் பதிலாக நாங்கள் செய்திருப்பது என்னவென்றால், அம்மரத்திலுள்ள முக்கிய ஒரு கிளையை வெட்டியிருப்பது. அதுதான் பிரபாகரனின் தலைமையிலான ஆயுத கூட்டணி. புலிகள் மீண்டும் வளர்ந்துவருவது தெரிகிறது. அவ்வாறு வளர்வருமானால் அதற்கெதிராக இலங்கை அரசும், பாதுகாப்புப் பிரிவும் பிரதிநடவடிக்கை எடுக்கும் என்பதை நாங்கள் தெளிவுறுத்தியுள்ளோம். அதேபோல, சர்வதேச புலிப் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து, அவர்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் முழு முயற்சி எடுத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com