Friday, April 18, 2014

யாழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் தமிழ் சீஎன்என் நிறுவுனர் முன்னணியில். கே.ரி.இராஜசிங்கம் புகழாரம்.

வடகிழக்கு தமிழ் இளைஞர்களை முப்படைகளிலும் இணைத்துக்கொள்ளும் நல்லிணக்கத்தை நோக்கிய செயற்திட்டங்களின் ஒரு பகுதி நேற்று முன்தினம் யாழ் நெல்லயடி பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆட்சேர்ப்பு செயற்திட்டத்திற்கு தமிழ் சீஎன்என் இணையத்தளத்தின் நிறுவுனரான கண்ணன் மற்றும் செல்வா என்ற பெயர்களில் அறியப்படுகின்ற பிரித்தானியப் பிரஜை இலங்கை இராணுவத்தினருக்கு பல்வேறு வழிகளில் உதவி வருவதாக புலிவால் இணையங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அவதானிக்க முடிகின்றது.

கண்ணன் அல்லது செல்வா என்ற நபர் முன்னாள் புலி உறுப்பினர் என்பதுடன் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோரியவர். தமிழ் சீஎன்என் என்ற இணையத்தளத்தை நிறுவி புலிகளின் போலித்தமிழ் தேசிய இணையங்களுக்கு நிகராக இலங்கை அரசிற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தவர். தற்போது உண்மையினை உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் வெளிநாட்டுத் தலையீடுகள் எமக்கு தேவை இல்லை என்றும் ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதன் ஊடாகவே ஓர் வழமான தேசத்தை கட்டியெழுப்ப முடியுமென நம்புவதாக தெரிக்கின்றார்.

பிரித்தானிய வாழ்வை கைவிட்டு நெல்லியடி கரவெட்டி பிரதேசத்தில் தங்கியுள்ள கண்ணன் அல்லது செல்வா யாழ் மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு பூணர ஒத்தாசையாக செயற்பட்டு வருகின்றார். சுமார் 25 வருடங்கள் அரசுடன் ஒட்டண்ணியாக யாழ் குடாநாட்டிலே தங்கி நிற்கின்ற, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற பெயர் கொண்ட ஈபிடிபி யினால் சாதிக்க முடியாதுபோன தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் முயற்சி இன்று பெருவெற்றி கண்டுள்ளது என்றும் இச்செயற்பாட்டுக்கு செல்வாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறப்படுகின்றது.

இவ்விடத்தில் இலங்கைநெற் சுட்டிக்காட்ட விரும்புவது யாதெனில் இலங்கை அரசிற்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த செல்வாவும் இலங்கை அரசிற்கு ஆதவான பிரச்சாரங்களையே மேற்கொண்டு வருகின்றார் என புலி ஆதரவு இணையங்களால் தொடர்சியாக குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிவரும் கே.ரி. ராஜசிங்கம் ஒரே மேடையில் அமர்ந்திருந்து இலங்கை இராணுவத்தின் முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதானது எதிர்காலம் தொடர்பான சிறந்ததோர் சமிக்கையாகும்.

இந்த நிகழ்விலே கலந்து கொண்ட கே.ரி.ராஜரட்ணம் செல்வாவின் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் யாழ் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்து கொள்வதன் ஊடாக சமூதாயமும் அவர்களும் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் தொடர்பில் விளக்கினார்.

கே.ரி.ராஜசிங்கத்தின் உரை வருமாறு :







1 comments :

Anonymous ,  April 18, 2014 at 4:29 PM  

K.T. இராஜசிங்கம் 1970 களில் நெல்லியடி பலநோக்கு கூடுறவு சங்க சமாசத்தில் கொள்ளை அடித்ததினை மறக்காத மனிதர்கள் இன்னும் இருக்கின்றார்கள்.
புலிகளுக்கும், புலி எதிர்ப்பாளர்களுக்கும் அல்லது தமிழ் தேசியத்திற்கும், துரையப்பாவின் வாரிசுகளுக்கும் இடையில் இருக்கும் போட்டி எப்பொழுதும் வடகிழக்கில் கொள்ளையடிப்பதை சுற்றியே இருக்கின்றது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com