Monday, April 7, 2014

பெருவரவேற்பைப் பெற்ற டாக்டர் முஸ்தபா ரயீஸின் “குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்களிப்பு” (படங்கள் இணைப்பு)

வெலிகம லீட் பவுண்டேஷன் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை வெலிகம நகர சபை மண்டபத்தில் ஒழுங்குசெய்திருந்த, பிரபல உளவளவாளரும், மருத்துவக் கலாநிதியுமான டாக்டர் முஸ்தபா ரயீஸின் “குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்களிப்பு” குர்ஆனிய மருத்துவக் கண்ணோட்டம் - எனும் தலைப்பில் உரையாற்றினார்.

உரையைக் கேட்பதற்காக ஏறத்தாள 1200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

குழந்தைகளின் உள - உடல் வளர்ச்சி, தான் மருத்துவத்துறையில் சந்தித்த உள ரீதியாகப் பாதிக்கபட்டோர் பற்றிய விபரம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர்கள் உள - உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கப்படும் நிலை, சிறுவர்கள் சமூகத்தில் சிறந்த சிற்பிகளாக மாற வேண்டின் கடைப்பிடிக்கப்பட வேண்டியன யாவை?, மனித உரிமைகள் பற்றி வாய்கிழியக் கத்தும் அமெரிக்கா 1960 களுக்கு முன்னர் மனித உரிமை மீறிய முறை, அல்குர்ஆன் காட்டும் குழந்தை வளர்ப்பு, சிறுவர்களை அணுக வேண்டிய முறைமை.. இன்ன பிறவிடயங்கள் பற்றி ஏறத்தாழ 3 மணித்தியாலங்கள் தொடர் உரை நிகழ்த்தினார் டாக்டர் முஸ்தபா ரயீஸ்.

உரையின் முடிவில் கேள்வி - பதிலுக்கான நேரத்தில் பெற்றோர்களின் கேள்விகளில் சிலவற்றுக்கு சிறந்த பதிலளித்தார் டாக்டர்.

நிகழ்ச்சி முடிவில் டாக்டர் முஸ்தபா ரயீஸ் அவர்களுக்கு வெலிகம லீட் பவுண்டேஷன் உறுப்பினர்கள் நினைவுச் சின்னமொன்றை அன்பளிப்புச் செய்தனர்.

(கலைமகன் பைரூஸ்)


Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com