Wednesday, April 9, 2014

ஜாதிக்க பல சேனாவின் ஊடக சந்திப்பில் அத்துமீறி நுழைந்தது பொதுபல சேனா! (காணொளி இணைப்பு)

மதப் புரிந்துணர்வு தொடர்பாக தெளிவுறுத்தும் நோக்கில் “ஜாதிக்க பல சேனா” அமைப்பு இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பொதுபல சேனாவினர் அத்துமீறி நுழைந்ததனால் நிலைமை சூடுபிடித்துள்ளது.

கொழும்பு கொம்பனித்தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வூடக ஒன்றுகூடலில் வட்டரெக விஜித்த தேரர் மற்றும் பிறமதத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த இடத்திற்கு அத்துமீறி நுழைந்த பொதுபல சேனா அமைப்பினர், தமக்கும் அதில் கலந்துகொள்ள இடம்தருமாறு பலவந்தமாகக் கேட்டுள்ளனர்.

எதுஎவ்வாறாயினும், அந்த வேண்டுகோளை ஜாதிக்க பல சேனா அமைப்பினர் நிராகரித்ததைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே பலத்த வாய்த் தர்க்கம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் குறிப்பிடும்போது, வடரெக்க விஜித்த தேரர் தாம் கூட்டிய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் மன்னிப்புக்கோர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

(கேஎப்) நன்றி - Daily Ceylon

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com