Friday, April 11, 2014

வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறும் 'வாழ்வின் எழுச்சி' விற்பனைசந்தை

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு பிரதேச மட்டத்திலான வாழ்வின் எழுச்சி விற்பனைசந்தை வவுனியா பிரதேசசெயலகத்தில் சித்திரை 10ம் மற்றும் 11ம் திகதிகளில் இடம்பெறுகிறது.

கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதின் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிசந்திர அவர்களால் திறந்துவைக்கப்பட்டவாழ்வின் எழுச்சி விற்பனைசந்தையை வவுனியா பிரதேச செயலகம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வவுனியா பிரதேசசெயலக வாழ்வின் எழுச்சி திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது விற்பனைசந்தையில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தியிருந்ததுடன் குறித்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரும்பாலான விற்பனையாளர்கள் மிகவும் மலிவாக தமது விற்பனை பொருட்களை விற்பனை செய்தpருந்தனர் அத்தோடு ஆயிரக்கணக்கான ம்க்கள் மிகவும் மலிவாக பொருட்களை வாங்கி சந்தோசப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

இன்நிகழ்வுக்கு கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதின் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிசந்திர பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாறுக் வாழ்வின் எழுச்சி திணைக்கள மேலதி பணிப்பாளர் குமாரஸ்ரீ மாகணபிரதிப்பணிப்பாளர் பீரிஸ் சமுர்த்தி பிரதி ஆணையாளர் வாழ்வின் எழுச்சி பிரதி ஆணையாளர் வாழ்வின் எழுச்சி திணைக்கள பினாந்திய ணிப்பாளர் வவுனியா சிங்கள தெற்கு பிரதேச செயலாளர் செட்டிகுளம் பிரதேச செயலாளர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச செயலாளர் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் போன்ற பல முக்யஸ்தர்கள் கலந்து சிறப்பிததிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com