Friday, April 4, 2014

முல்லைத்தீவில் கோப்பாப்பிலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 101 வீடுகள் கோட்டாபயவினால் வழங்கி வைப்பு! (படங்கள்)

ஓவ்வொரு வீட்டு உரிமையாளர்களும் தமக்குறிய வீட்டுடன் 40 பேச்சஸ் காணியும் வழங்கப்பட்டது

முல்லைத்தீவு கோப்பாப்பிலவு மாதிரி கிராமத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 101 வீடுகளை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பொதுமக்களிடம் வழங்கிவைத்தார். இத் திட்டத்திற்கான நிதியானது மீள் குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டதுடன் இதற்கான ஊழியர்கள் மற்றும் பொறியியல் நிபுனர்கள் முல்லைத்தீவு பாதுகாப்புப்படை தலைமையகத்தால் வழங்கப்பட்டது.

ஓவ்வொரு வீட்டு உரிமையாளர்களும் தமக்குறிய வீட்டுடன் 40 பேச்சஸ் காணியும் வழங்கப்பட்டது. அதேநேரம் செயலாளர் ராஜபக்ஷ அவர்கள் இவ் வீடமைப்புத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்துக்கான அடிக்கல்லையும் நட்டுவைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கும், சமூகசேவையில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நன்றி கூறியதுடன் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 98 ஏக்கர் விவசாய நிலம் 29 விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்திருந்த வெல்லமுல்லிவாய்கால் மக்களின வாழ்கைக்த் தரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அம்மக்களின் நிலங்களில் இருந்த கன்னிவெடிகள் அகற்றப்பட்டதுடன், வீடுகள் புனர் நிர்மானிக்கப்பட்டு அப்பிரதேச மக்களை மீழ் குடியேற்றும் நிகழ்வு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

1 comments :

Arya ,  April 10, 2014 at 3:32 AM  

What had chandirka done well for country if she was president, but Mr. Rajapakse done many good things to Country and destroyed LTTE terrorits.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com