Monday, March 24, 2014

TMVP உறுப்பினர் கொலை தொடர்பில் மூன்று வருடங்களின் பின்னர் நால்வர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனையில் 21-01-2010 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சி உறுப்பினர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிஸ்தர் உட்பட நான்கு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்யதுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை இவர்களை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னாமுனை களப்பு பகுதியில் 23-01-2010 அன்று கழுத்துவெட்டப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினராக அரவிந்தன் என்பவரது சடலம் மீட்க்கப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் தன்னாமுனையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டவர் உட்பட மேலும் இருவரை கைதுசெய்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின்போது கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டுவந்த வசந்தகுமார் என்பவர் கழுத்தினை அறுத்து கொலைசெய்தார் என தெரியவந்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்பு லிகள் கட்சி உறுப்பினருக்கும் வசந்தகுமாருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பினை தொடர்ந்து குறித்த நபரை தனியாக அழைத்து அவரை தாக்குதவதற்காக மூன்று இளைஞர்களுக்கு வசந்தகுமார் என்பவர் மதுவாங்கிக்கொடுத்துள்ளார்.

ஆதனைத்தொடர்ந்து தொலைபேசியில் தன்னாமுனை ஆற்றங்கரைக்கு அரவிந்தன் அழைக்கப்பட்டுள்ளார். அங்குவைத்து ஏனைய மூன்று இளைஞர்களும் அரவிந்தனை தாக்கியபோது தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்தனை வசந்தகுமார் என்பவர் வெட்டியுள்ளதாக விசாரணையின் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகரவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் பெரேரா தலைமையில் சென்ற சுகியான்(61217), பிரியங்க(66427), மஜித்(80044), செல்வம்(67995) ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினரே மேற்கொண்டுவந்தனர்.

இதன்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் நேற்று சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com