Sunday, March 9, 2014

பிள்ளையின் இரத்தத்தின் மீது ஆசை வைக்கிறது “லக்மவ தியனியோ”அமைப்பு! (படங்கள் இணைப்பு)

நாங்கள் ஒரு இனமாக இருந்து பிரிவினைவாத பயங்கரவாதிகளை வெற்றிகண்டோம். அந்த வெற்றியை முறியடிக்கும் நோக்கில், இன்று ஐக்கிய அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் பிரேரணைகளை முன்வைப்பதாகவும், அதன்பால் “லக்மவ தியனியன்” கீழ்ப்படிதலுக்கும், தலைசாய்த்தலுக்கும் சோரம் போக மாட்டாது எனவும், அதற்கு எதிராக நேற்று (08) நாளை உயிரைப் பணயம் வைத்துப் போரிடத் தயாராகவிருப்பதாகவும் “லக்மவ தியனியோ” அமைப்பு தெளிவுறுத்துகிறது.

நேற்று (08) சர்வதேச மகளிர் தினத்தில் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலய முன்றலில், “கொள்கை வெளியீடு” ஒன்றை முன்வைத்துவிட்டு, அதன் பின் அங்கு லக்மவ தியனியோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரியங்கா கொத்தலாவல கருத்துரைக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த பிரியங்கா கொத்தலாவல,

“இன்று பிரபாகரன் விடயத்தில் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையும், மேற்கத்தேயமும், அடிவருடிகளும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி, அதற்காக இந்நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகளும், மேற்கத்தேயத்தின் அடிவருடிகளாகிய சில அரச சார்பற்ற நிறுவனங்களும் உடந்தையாக நிற்கின்றன. என்றாலும், கடந்துசென்ற மூன்று தசாப்த புலிப் பயங்கரவாதத்தினால் மனித உரிமைகள் இழந்துள்ள இந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரும், அவர்களின் குடும்பங்கள், இலட்சக்கணக்கான பொதுமக்களின் மனித உரிமைகள் பேசுவதற்கு யாருமில்லை.

இன்று ஐக்கிய அமெரிக்கா ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் பிரேரணையொன்று முன்வைத்துள்ளது. நவநீதம்பிள்ளை ஸ்ரீலங்காவுக்கு எதிராக அறிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இவர்கள் அனைவரும் பிரபாகரனின் மனித உரிமைகள் தொடர்பில் எழுந்து நிற்கிறார்கள். இன்று சர்வதேச பெண்கள் தினத்தில் நாங்கள் ஐக்கிய அமெரிக்க தூதுவரலாயத்திற்கு முன்பாகக் கூடியிருப்பதன் காரணம், “பிரபாகரனால் மனித உரிமை மீறப்பட்டவர்கள் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியாதா? எனக் கேட்பதற்கே. அதுமட்டுமன்றி, அதுமட்டுமன்றி, அவர்களால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு, நாடெங்கிலும் உள்ள பெண்களின் எதிர்ப்பினைக் காட்ட. இன்று நாங்கள் எங்கள் எதிர்ப்பை, “கொள்கை வெளியீ”ட்டின் மூலம் காட்டியுள்ளோம்.

அதேபோல, நவநீதம்பிள்ளைக்கும் அமெரிக்காவுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறோம். எங்கள் இராணுவத்தினர் உட்பட எவரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை. புலிப் பயங்கரவாதிகளால் உயிர்ப்பிணையாளர்களாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த இலட்சக் கணக்கான தமிழ் மக்களை மனிதாபிமானம்மிக்க எங்கள் இராணுவத்தினரே.

நாங்கள் நவநீதம்பிள்ளை “நோனா”வுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறோம். நீங்கள் எங்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் பற்றி வாய்திறப்பது இருக்கட்டும். தீவிரமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா உட்பட்ட நாடுகளுக்குச் செல்லுங்கள்… அங்கே உங்கள் விரல்களை உயர்த்துங்கள்..

“மார்ச் மாதம் 28 ஆம் திகதி எங்கள் நாட்டுக்கு எதிராக எந்தப் பிரேரணையைக் கொணர்ந்தாலும், நாடு பெற்ற வெற்றியை பின்னே தள்ளுவதற்கு யாருக்கும் இந்த லக் மவ தியனியன் அமைப்பாகிய நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதையும் நாங்கள் இவ்வேளை, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய மேலாதிக்கவாதிகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இன்று நாங்கள் இந்த கொள்கை வெளியீட்டின் மூலம் கடைசியாக நாங்கள் சொல்லியிருப்பது என்னவென்றால், பெண்கள் அமைப்பினராகிய நாங்கள் எதிர்வரும் நாட்களில் எங்கள் உயிரையும் பணயம் வைத்து நாட்டுக்காகப் பாடுபடுவோம்.. “நாங்கள் கீழ்ப்படியவும் மாட்டோம்.. தலைசாய்க்கவும் மாட்டோம்”

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டாரத்திலிருந்து வெள்ளை உடை அணிந்து வந்திருந்த “லக்மவ தியனியோ” உறுப்பினர்கள் பாதசாரியாக ஐக்கிய அமெரிக்க தூதுவராலய முன்றலில் கூடியதுடன், நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இராணுவத்தினருக்கு அஞ்சலியும் செலுத்தினர். அதன் பின்னர் “கொள்கை பிரசுரத்தை” ஆங்கில - சிங்கள மொழிகளில் உரத்து வாசித்தனர்.
கடைசியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு எதிராக செயற்படுவது குறித்து, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அவரது படமொன்றில் எல்லோரும் சிவப்பு மையினால் இரத்தம் போலும் தங்கள் கை அடையாளத்தை வைத்தனர் லக்மவ தியனியோ அமைப்பினர்.

இந்நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீர்ர்களும், இராணுவ கைம்பெண்கள் உட்பட இராணுவத்தினரின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

(தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பிரிவு, கலைமகன் பைரூஸ்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com