Sunday, March 16, 2014

ஆம், நான் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவேன்! - அஜித் பிரசன்ன

தான் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியது உண்மைதான் என தென் மாகாண மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அஜித் பிரசன்ன குறிப்பிடுகிறார்.

தான் அவ்வாறு செய்ததன் காரணம் நீதியை நிலைநாட்டவே என்கிறார் அவர்.

“நான் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகிறேன். இந்த தேர்தல் சட்டம் பணம் படைத்தவருக்குத்தான் உகந்த்து. இல்லாதவ ரை இல்லாமல் செய்வதுதான் இந்தத் தேர்தல். சுவரொட்டிகள் ஒட்ட முடியாது. கையேடுகள் வழங்க முடியாது, பத்திரிகைகளில், தொலைக்காட்சியில், வானொலியில் விளம்பரம் போட முடியும். இசைக் கச்சேரிகள் நடாத்தவும் முடியும். வாக்காளர்களின் கைகளுக்கு கடிதங்களை கையளிக்கச் சொல்கிறார்கள்.

இந்த அனைத்து வாக்காளர்களுக்கும் கடிதம் போடுவதாயின் இலட்சக் கணக்கில் பணம் விரயமாகும். வீட்டுக்கு வீடு போகுமாறு சொல்கிறார்கள்… அதற்கும் இலட்சக் கணக்கில் செலவாகின்றது.

என்னைப் போன்ற சாதாரண குடிமகன் எவ்வாறு அவ்வாறு செய்வது? அதனால்தான் நான் தேர்தல் சட்டதிட்டத்தை மீறி செயற்பட்டேன்.

நான் பெந்தர பிரதேச சபைக்குச் சென்று கையேடுகள் பகிர்ந்தளித்தேன். நான் ஆசிரியத் தொழிலை விட்டு இராணுவத்தில் இணைந்தது இறப்பதற்கே. நான் சாவதற்கு பயமில்லை. தேவையாயின் என்னைத் தண்டிப்பார்கள். என்னை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கிவிடுவார்கள். அவர்கள் அவ்வாறு செய்வார்களாயின் எந்தவொரு திருடனையாவது அதற்காக இணைத்துக் கொள்ள முடியும்.

நான் இதனை நியாயத்திற்காகவே செய்கிறேன். பெபரலிலிருந்து என்னைத் தேடினால் தூய சிங்களத்தில் சொல்லிக் கொடுப்பேன்” எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com