Wednesday, March 12, 2014

அச்சச்சோ தொலைவஞ்சல் இப்படியுமா?

தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தந்திச் சேவைக்குப் பதிலாக “டெலிமேல்” எனும் தொலைவஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், அதிலிருந்து எதிர்பார்த்த சேவையை மக்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

தபால் நிலையங்களினுடைய தொலைபேசி இலக்கமொன்று டெலிமேல் அனுப்புவதற்குத் தேவைப்படுவதாகவும், அப்படியான ஒரு இலக்கத்தை திணைக்களம் வழங்காத காரணத்தால், அனுப்புநரின் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சரியாக டெலிமேல் அனுப்ப முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உபதபால் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொலைபேசி இலக்கத்தைத் தெரிந்து கொள்வதற்கு, தொலைபேசி தகவலைப் பெற்றுக் கொள்வதற்கு, அலுவலக தொலைபேசியைப் பயன்படுத்தும்போது குறித்த அளவு அழைப்புக்களையே மேற்கொள்ள முடியுமாவதால் தனிப்பட்ட தொலைபேசி கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் அதுதொடர்பில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொலைபேசி பெயர்ப்பட்டியலை பக்கம் பக்கமாகப் புரட்டி இலக்கங்களைத் தேட அதிக நேரம் செல்வதால் அதிலும் மக்கள் அதிருப்தியுறுகின்றனர்.

தொலைபேசி இல்லாத தபால் நிலையங்களுக்கு டெலிமேலை கையளிக்கும்போது, அவர்கள் சாதாரண கடிதங்கள் அனுப்பும் பொதியில் பிரதான தபால் நிலையத்திற்கு அனுப்புகின்றனர். அவர்கள் அங்கிருந்து அனுப்ப வேண்டிய இடத்திலுள்ள தபால் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் விடயத்தை அறிவிக்கின்றனர். அதனால் விரைவாக மக்கள் எதிர்பார்த்து அனுப்புகின்ற டெலிமேல் (தொலைவஞ்சல்) காலம் கடந்தே குறித்த நபரைப் போய்ச் சேருகின்றது என பொதுமக்கள் குறைபடுகின்றனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com