Wednesday, March 12, 2014

சிங்கள – முஸ்லிம் குடியேற்றங்களை யாழ் மக்கள் எதிர்க்கவில்லை வடக்கின் சில அரசியல்வாதிகள்தான் எதிர்க்கின்றனர்– மஹிந்தர்

புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள- முஸ்லிம் மக்களை மீண்டும் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது என்பதுடன் இதனை யாழ்ப்பாண மக்களோ அல்லது வடபகுதி மக்களோ எதிர்க்கவில்லை ஆனால் இதனை வடபகுதியில் உள்ள சில அரசியல்வாதிகள்தான் எதிர்க்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


தென் மாகாணத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து ரத்மலானையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் . 

மேலும் எமது மக்களின் விசுவாசமும் நம்பிக்கையும் இருக்கும் வரை எம்மை எந்தவொரு சக்தியாலும் மாற்ற முடியாது என்பதுடன் மக்கள் வழங்கிய ஆணையின்படி 2016 ஆம் ஆண்டு வரை நாமே ஆட்சியிலிருப்போம் .

எனினும் சில சக்திகள் இந்த நாட்டில் இரத்தம் சிந்திய கடந்த காலத்தை மீளவும் உருவாக்க விரும்புகின்றனர் எனினும் அவ்வாறானதொரு நிலைமையை மீண்டும் நாட்டில் ஏற்பட அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்தார்.

மேலும் இந்ந நாட்டில் யாரும் எந்தப் பகுதியிலும் வாழ்வதற்கான சுதந்திரம் உள்ளது எனவே இதனை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

1 comments :

Anonymous ,  March 12, 2014 at 11:11 PM  

well speach from our President Mr.H.E. Rajapakshe, this is true.

No body can put there nose in Sri Lanka, when they have there own nationality.(ALL LTTE DIASPORAS HOLDING THERE OWN NATIONALITY; WHERE THEY ARE LIVING)

Before 1940, how many massacre has been in India and in Sri Lanka?? who done??? Why Mahatma Ghandi send all whites out of India?



Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com