Wednesday, March 19, 2014

யாழில் இயங்கும் விடுதிகள் அனைத்தும் தொடர் கண்காணிப்பில் - மாநகர முதல்வர்!

தமிழர்களின் கலாச்சாரங்களைச் சீரழிக்கின்ற எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் மாநகரசபை ஒரு போதும் அனுமதி வழங்காது என்பதுடன் இதனை கருத்தில் கொண்டு யாழில் இயங்கும் விடுதிகள் அனைத்தம் மாநகர சபையால் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக யாழ். மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆணையாளர் அலுவலகத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிடும்போதே முதல்வர் இதனை தெரிவித்தார்.

மேலும் தற்போது யாழில் பல விடுதிகள் இயங்கி வருவதுடன் இவற்றில் சில அனுமதி பெற்ற விடுதிகளாகவும் சில அனுமதி பெறப்படாத விடுதிகளாகவும் இயங்கி வருகின்றன எனவே அனுமதி பெறாமல் இயங்கி வருகின்ற விடுதிகளை உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு மாநகர சபையால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அனுமதி பெறாமல் இயங்கிய வரும் விடுதிகளிலேயே அண்மைக்காலத்தில் அதிக கலாச்சார சீரழிவுகள் நடைபெற்றுள்ளன எனவே தொடர்ந்தும் அவ்வாறான கலாச்சார சீரழிவுகள் நடைபெறுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவே மாநகர சபையின் எல்லைக்குள் மாநகர சபை அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் தொடர்பாக மாநகர சபைக்கு உடனடியாக அறியத்தருமாறு மாநகரசபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இதே வேளை தமிழர்களின் பாரம்பரிய கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் சீரழிவதையோ அல்லது சிதைக்கப்படுவதையோ அனுமதிக்க முடியாத அதேவேளையில், இதனைப் பாதுகாக்கவும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது எனவே அனைவரும் ஒன்று பட்டு செயற்படுமிடத்து காலாச்சாரத்தை பாதுகாக்க முடியும்.

எனவே இதற்கேற்ற வகையில் மாநகர சபை தனது பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமென்றும், இதேபோன்று ஏனைய தரப்பினர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாநகர முதல்வர் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா வேண்டுகோள் விடுத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com