Friday, March 28, 2014

ஜெனீவாவில் தேசத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு கிடைத்த பலன் என்ன?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணை மீதான விவாதம் நேற்று விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ள அதேநேரம், 12 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. 47 நாடுகளின் அங்கத்து வத்தைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை பேரவையில் 24 நாடுகள் இலங்கைக்கு சாதகமாக வாக்களித்துள்ளன. மேற்கத்தேய நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளன.

இந்தப் பிரேரணைக்கு எதிராக அல்ஜீரியா, சீனா, கொங்கோ, கியூபா, கென்யா, மாலைதீவு, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுவெலா, வியட்னாம் ஆகிய நாடுகள் வாக்களித்தன.

பர்கினா பாஸோ, எத்தியோப்பியா, கபொன், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஸகஸ்தான், குவைத், மொரோக்கோ, நமீபியா, பிலிப்பைன்ஸ், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் நடுநிலை வகித்தன.

பாகிஸ்தான் இந்தப் பிரேரணையை கடுமையாக விமர்சித்ததுடன், இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான பிரேரணையென்றும் கூறியது. அத்துடன், இந்த வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட தலைவர் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் வாக்கெடுப்புக்கு விட்டார். எனினும் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. இதேநேரம் பிரேரணையின் பத்தாவது சரத்தில் மாற்றம் கொண்டுவர பாகிஸ்தான் முன்வைத்த யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தப் பிரேரணையின் விவாதத்தில் கலந்தகொண்ட இந்திய பிரதிநிதி தனது கருத்தைத் தெளிவாகத் தெரியப்படுத்தியதுடன், வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிக்கப் போவதாகவும் கூறினார். கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்திருந்தன.

எனினும், இம்முறை அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவளித்த நாடுகளின் எண்ணிக்கை இரண்டால் குறை வடைந்துள்ளது. அதேநேரம் 22 நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித் திருந்தன. எனினும் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடு களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com