Thursday, March 6, 2014

தமது பிள்ளைகளின் படுகொலை தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றம் வராமல் ஜெனீவா சென்ற காரணம் என்ன?

தமது பிள்ளைகளின் படுகொலை தொடர்பாக அரசாங்கம் நியாயமான விசாரணை நடத்தவில்லையென கோரி ஜெனீவா சென்ற பெற்றோர் சாட்சியமளிப்பதற்கேனும் நீதிமன்றத்திற்கு வருகை தரவில்லையென தெரிய வந்துள்ளது.

1996 ஆம் ஆண்டு திருகோணமலை காந்தி சுற்றுவட்டத்தில் மர்ம நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை
தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதவான் ஈ.சரவணராசா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கெபாள்ளப்பட்டது. இச்சம்வத்தில் ஐவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் சாட்சியாளர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தரவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமது பிள்ளைகளின் படுகொலை தொடர்பாக நியாயமான விசாரணை கோரி கண்ணீர் வடித்த சாட்சியாளர்களும் இந்த படுகொலைகளை தமக்கு சாதகமாக கொண்டு புலம்பெயர் தமிழர்களின் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

இதே நேரம் நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது வாகனத்தில் தொழிpல்நுட்ப கோலாறு ஏற்பட்டதாக கூறி பிரதிவாதிகளும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை. அவர்களுக்கு பிடிவிராந்து விதித்த நீதவான் தாமதத்திற்கான காரணத்தை நாளை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும் அன்றைய தினம் சாட்சியாளர்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் நீதவான் உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com