Tuesday, March 25, 2014

ஜெனீவா பிரேரணையில், நாளுக்கு நாள் திருத்தம்! இலங்கையின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை !

ஜெனீவா மனித உரிமை மாநாட்டில், இலங்கைக்கு எதிராக சமாப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில், நாளுக்கு நாள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இலங் கையின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை யென, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, செய்தி யாளர் மாநாட்டில் தெரிவித்தார். நேற்று வரை நான் மாநாட்டில் பங்கேற்றேன். நாளுக்கு நாள் பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச ரீதியில் விசார ணைகள் நடாத்தப்படுவதை, நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம்.

இந்த நிலைப்பாட்டில் எதுவித மாற்றங்களும் இல்லை. இலங்கையில் சர்வதேச ரீதியில் விசாரணைகள் நடத்தப்படக்கூடிய அளவிற்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையென்பதை நாம் வலியுறுத்துகின்றோம். அரச தலைவர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள், ஒரு சில நாடுகளில் மனித உரிமை ஆணை யாளர்களிடம் புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட ஒரு சிலரினால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தினோம். அவர் களுக்கு இது தொடர்பில் தெளிவுகளையும் வழங்கியுள்ளோம். நாம் இதுவரையில் வெற்றிகளை பெற்றுள்ளோம். சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில், மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை இறுதி வரைவினை எமக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவ்வாறு சர்வதேச விசாரணைகளை நடாத்த முயற்சிக்கும் வேளையில், அவர்களின் உதவி இதற்கு கிடைக்க மாட்டாது என்றும், பல நாடுகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், 26ம் திகதியாக இருந்தாலும் இதில் திருத்தங்களை மேற்கொள்ள, முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com