Sunday, March 30, 2014

கடந்த 20 நாட்களுக்குள் வடக்கில் புலிகளுக்கு உதவி செய்து கைதானோர் விபரம்!

மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான 20 நாட்களுக்குள் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கொழும்பிலுமாக புலிகளுக்கு உதவி செய்த 44 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் கொழும்பு 4 ஆம் மாடி குற்றப் புலனாய்வுப் பிரிவிலும், பூஸா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர்களில் சிலரின் விபரங்கள் முன்னர் வெளியாகியிருந்தன எனினும், பாதுகாப்புக் கருதி ஏனையோரின் பெயர் விவரங்களை வெளியிட அவர்களின் உறவினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். 

உறவினர்களின் சம்மதத்துடன் வெளியாகிய விவரங்களின் புலிபோராளி அவரது மனைவி மற்றும் 6, 10 வயதான அவரது இரு பிள்ளைகளுடன் குடும்பமாக பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

* 18.03.2014 அன்று அரசால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான முன்னாள் புலிபோராளி ஒருவரை முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிவரும் மயில்வாகனம் ஜசீகரன் (வயது – 34) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

* 20.03.2014 அன்று வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணியில் வைத்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீன் வியாபாரம் செய்து வரும் சபாரத்தினம் ஜெயரமேஷ் (வயது – 37) என்பவரை பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

* 21.03.2014 அன்று மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்து பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

* 21.03.2014 அன்று இரவு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் வவுனியா – ஸ்ரீராமபுரம் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்தவருமான லோகநாதனும், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் பிள்ளைகளான பாரதி (வயது – 8), கண்ணன் (வயது – 6) ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

* 22.03.2014 அன்று , வட்டுக்கோட்டை பகுதியில் அதிகாலை தொடக்கம் நண்பகல் வரை இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அங்கு தொழில் புரிந்து வந்த மன்னாரைச் சேர்ந்த இரும்பு வியாபாரியான காந்தலயனை பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com