Monday, February 17, 2014

ஜேவிபி வெற்றுப் பேச்சில் வல்லவர்கள்.. செய்தது ஏது என எங்களிடம் கேட்கிறார்கள்...!

ஆளும் கட்சிக்காக இளைஞர்,யுவதிகள் குடு குடித்துக்கொண்டு பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு மிக மிக நல்லது என மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை அபேட்சகர் கே.டீ. லால்காந்த குறிப்பிடுகிறார்.

ஹொரண தலகல பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றின்போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

“பொலிஸாரின் சட்டம் இல்லாமைக்காக தேங்காயொன்றைத் திருடிய மாணவி மீதுதான் நீளுகிறது. மக்களின் சொத்துக்களை சூரையாடுகின்ற, ஏப்பம் விடுகின்றவர்கள் சொகுசு வாழ்க்கை நடாத்தி ஒய்யாரமாய் வெளியே இருக்கின்றார்கள்.

அமைச்சரவையில் 105 பேர். அமைச்சர்கள் 20 பேருடன் கூடிய அமைச்சரவை இருந்தது. மேல் மாகாண சபையிலிருந்து அமைச்சரவையில் ஐவர். அதிகரிக்க முடியாது. இல்லாவிட்டால் முதலமைச்சர் அமைச்சரவை உறுப்பினர்களை 60 ஆக உயர்த்துவார். மாகாண சபை யாப்பில் அமைச்சரவை உறுப்பினர்களை 50 ஆக குறிப்பிட்டிருப்பதுதான் அதற்குக் காரணம். அரசாங்கத்திற்கும் அமைச்சரவை உறுப்பினர்களை கட்டுப்படுத்தலாம்.

மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பிலும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். ஜேவிபி வெற்றுப் பேச்சில் வல்லவர்களாக இருக்கிறார்கள். தீர்வு என்னவோ? என எங்களிடம் கேட்கிறார்கள். ஆளும் கட்சியினர் குடும்பக் கட்சியினர். அவர்களை மாற்றியமைப்பது காலத்தின் தேவையாக உள்ளது. மாற்றம் தேவை.. தற்போது போதைப் பொருள் பாவனை இலங்கையில் அதிகரித்துள்ளது. இளைஞர் யுவதிகள் அதனை உபயோகித்து பைத்தியம் விளையாடினால் ஆளும் கட்சியினருக்கு.. அப்பாடா என்ன சந்தோஷம் தெரியுமா? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com