Saturday, February 1, 2014

இந்தியர் ஒருவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றியது சவூதி!

சவூதி அரேபியாவில் தன்னை வேலைக்கு அழைத்துச் சென்ற முகவரை கொலை செய்த வழக்கில் இந்தியர் ஒருவரின் தலையை துண்டித்து வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

"கருத்து வேறுபாடு காரணமாக இந்தியரான முகமது லத்தீப் தனது இரும்புக் கம்பியால் தாக்கியதில் தபில் அல்-தொசாரி இறந்துள்ளார். பின்னர் அவரது உடலை ஒரு கிணற்றில் போட்டு விட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், லத்தீப் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன் அவருக்கு மரண தண்டனை விதித்தது" என கூறப்பட்டுள்ளது.

சவூதியில் பலாத்காரம், கொலை, மதத்தை இழிவுபடுத் துதல், ஆயுத கொள்ளை மற்றும் போதை மருந்து கடத்தல் ஆகியவற்றுக்கு ஷரியா சட்டப்படி மரண தண்டனை வழங்கப் படுகிறது. இந்த ஆண்டில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது.

5 comments :

Anonymous ,  February 1, 2014 at 8:12 PM  

உலக நாடுகள் மக்கள் காட்டுமிராண்டிகளின் நாடுகளுக்கு வேலை தேடி போவதை தடை செய்ய வேண்டும்.
வனாந்தர நாடுகளில் பெற்றொலிம் இருப்பதால் பணம் இருக்கிறது. மற்றும் படி மண்டைக்குள் ஒரு வித சரக்கும் இல்லை. காட்டுமிராண்டிகள் பெற்றோல் வத்தி போன பின்னர் என்ன செய்வார்கள்?
அப்போ விளங்கும. ஒரு நாயும் கிட்ட எடுக்காது.

Anonymous ,  February 2, 2014 at 5:25 AM  

kutraththukku thandanai koduththaal athu kaaattu mirandithanama? kutra valihalai koondil theeni pottu valarppathu nahareeham? indiyavi pengalukku enna pathuhaaapu delhi sambavaththil eenn kilarnthu eluntheerhal? innum gujarathil nadanthathai marakka mudiyuma? naan saudi aatharavalan alla aanaal thandanai koduppathu niyayeme

Anonymous ,  February 2, 2014 at 7:49 AM  

sariya saddam intha kalathukku uriyathalla. palamayana saddam . saddam manithanai maatta vendum. alikka koodathu.

ஒரே இறைவனின் அடிமை ,  February 2, 2014 at 3:09 PM  

முதலாவது தடவை தவறு செய்யும் போதுதான் சங்கடமாக இருக்கும், தயக்கமாக இருக்கும். இரண்டாவது தடவை செய்யும் போது அது தவறாகவே தெரியாது. கொலை, களவு, விபச்சாரம் என அனைத்து பாவங்களும் அவ்வாறுதான்.

ஒரு மனிதனுடைய உயிரை அநியாயமாக எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சட்டங்கள் கடுமையாக இருந்தால்தான் தவறுகளை நன்றாக குறைக்க முடியும். தவறு செய்பவனுக்கு தண்டனைகளை நினைத்தே பயம் வர வேண்டும், அவன் தவறின் பக்கம் நெருங்கவே கூடாது.

இன்று மேலைத்தேய நாடுகளிலேயே கேவலமான பாலியல் குற்றங்களும், கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறுகின்றன. அளவுக்கு மீறிய சுதந்திரங்களே இதற்கு காரணம். அரபு நாடுகளில் குற்றச் செயல்களின் அளவுகள் மிக மிக குறைவானவையே. தரவுகளை தேடி பெற்றுக் கொள்ளுங்கள். உண்மைகளை கண்டு கொள்வீர்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக மனித உரிமை பேசுகின்ற அனைவரும் குற்றங்களுக்கு ஜால்ரா போடுபவர்களே.

இஸ்லாமிய சட்டங்களுக்கும் உலக சட்டங்களுக்குமுள்ள வித்தியாசம். உலக சட்டங்கள் குற்றவாளியின் தரப்பிலிருந்து தண்டனை வழங்குகிறது. ஆனால் இஸ்லாமிய சட்டங்கள் பாதிக்கப் பட்டவரின் தரப்பிலிருந்து தண்டனைகளை வழங்குகிறது.

வெறும் 4 கொலைகள், 5 கற்பழிப்புக்கள் தானே செய்திரிக்கிறான், இவனுக்கு மரண தண்டனை கொடூரமானது, ஆயுள் தண்டனை விதிப்பார்கள், அவன் காலப் போக்கில் தண்டனை குறைக்கப்பட்டு வெளியிலே வந்து அமைதியாக வாழும் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவான், அவனுக்கு எதிராக சாட்சி சொல்லியவர்களை கொலையும் செய்வான். அவனுக்கு அது பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும்.

முதலாவதாக வேண்டுமென்றே தவறு செய்தவனுக்கு அச்சமயமே தண்டனை வழங்கியிருந்தால் மீண்டும் மீண்டும் தவறு நடப்பது குறையும், அடுத்தவர் குற்றமிழைக்கவும் தயங்குவார்.

முஸ்லிம் ,  February 6, 2014 at 8:42 AM  

முட்டாளின் பார்வையில் மற்ற அனைவரும் முட்டாள்களாகவே தெரிவார்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை முட்டாள்கள் என்று நிறுவ வேண்டுமென்றால் அது ஏன் என்பதற்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள் உலக மகா அறிவாளிகளே. உங்களது அறிவை கேட்டு நாங்கள் தெளிவு பெற்றுக் கொள்கிறோம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com