Friday, February 28, 2014

பிணத்தை வைத்து நடக்கின்றது பிழைப்பு.

இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கோபிதாஸ் எனும் பருத்திதுறையை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் இறந்திருந்தார். இவரது மரணம் இயற்கை மரணம் என்பது தெட்டத்தெளிவாக நிரூபணமாகியிருந்த நிலையிலும் இவ்விடயம் அரசியல் மயமாக்கப்பட்டு பல்வேறு வகையான வதந்திகள் பரப்பப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ் அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் குறித்த நபரை ஓர் அரசியல் கைதி எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர் அரசியல் கைதியா அன்றில் குற்றவாளியா என்ற விடயம்கூட இங்கு இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. கோபிதாஸ் மரணித்தபோது, அவர் ஓர் அரசியல் கைதி அல்ல என்பதும் அவர் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி என்பதும் தெட்டத்தெளிவான உண்மை. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றுக்காக தடைசெய்யப்பட்ட சில தொலைத்தொடர்பு சாதனங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டு சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கைநெட் ற்கு மகசின் சிறைச்சாலையில் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தகவல் தருகையில் : குறித்த நபர் நீதிமன்றின் ஊடாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 5 வருட கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர் என்றும், இவர் சிறைச்சாலையில் இருந்த காலத்தில் தனது தவறினை உணர்ந்து செயற்பட்டு வந்தவர் என்றும் சிறைச்சாலையின் சலவை பிரிவில் கடமையாற்றி வந்தார் என்றும் தெரிவித்த அவர் இவ்விடயம் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளால் தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் ஆனால் கோபிநாத் சிறைச்சாலையில் இருந்த காலத்தில் சிறைச்சாலை நிர்வாகத்துடன் மிகவும் ஒத்துழைப்பாகவும் ஒழுக்கமாகவும் இருந்தாகவும் கூறினார்.

பிணத்தை வைத்து பிழைப்பு நாடாத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் வக்கீல்களும் குறித்த நபர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தபோது எங்கிருந்தார்கள், இவர் ஒர் நிரபராதி என நிருபிக்க இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையாது? இவர் சிறைச்சாலையில் தவறாக வழி நடாத்தப்பட்டிருந்தால் அன்றில் அவர் மிது பாரபட்சம் காட்டப்பட்டிருந்தால் வக்கீல்களால் நிரப்பப்பட்டிருக்கும் தமிழ் தேசிக்கூட்டமைப்பு மேற்கொண்ட ஆக்கபுhர்வமான நடவடிக்கை என்ன?

1 comments :

Anonymous ,  February 28, 2014 at 2:42 PM  

Killer, smugler, terrorist are past a way - Paasisa Sivjilingam - making politics.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com