Wednesday, February 5, 2014

இலங்கைக்கு ரஸ்யா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் - ரஸ்ய பிரதி சபாநாயகர்

சுதந்திரத்தை பெற்று அபிவிருத்திப் பாதையில் வெற்றி கரமாக பயணிக்கும் இலங்கைக்கு ரஸ்யா தொடர்ந்தும் ஆதரவு வழங்குமென, அந்நாட்டு பிரதி சபாநாயகர், இலங்கை பாராளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள் ளார். ரஸ்ய பிரதி சபாநாயகர் சேர்ஜி செலஸ்நியேக் உள்ளிட்ட தூதுக்குழு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்தது.

நேற்றைய தினம் கேகாலையில் நடைபெற்ற 66 வது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்ட ரஸ்ய தூதுக்குழு, இன்று இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது. அந்நாட்டின் பிரதி சபாநாயகர், அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக் கையில், இலங்கைக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதே, தனது விஜயத்தின் நோக்கமென, தெரிவித்தார்.

இலங்கை ஒரு சாதக பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் ஒரு நாடாகும். தற்போதைய தலைமைத்துவத்தின் வழிகாட்டலில், இலங்கை ஆரம்பித்துள்ள இந்த அபிவிருத்திப் பயணத்திற்க நான் எனது வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். பயங்கர வாதம் ஒழிக்கப்பட்டு சகல இன மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்ளக் கிடைத்தமை, எமக்கு கிடைத்த ஒரு பாக்கியமாகவே கருதுகின்றோம். இலங்கை க்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, இலங்கைக்கு தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவி வழங்க, ரஸ்யா மிகுந்த விருப்பத்துடன் உள்ளது என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com