Tuesday, February 11, 2014

சுவிட்சர்லாந்தில் புலிப்பாட்டுக்கு தாளம் போட்ட முன்னாள் துரோகிகள்.

தமிழரிடையே பல பிரிவுகள் பிளவுகள் இருந்தாலும் பிரதானமான பிரிவும் பிளவும் தேசியவாதிகள், துரோகிகள் என வகைப்படுத்தப்படுகின்றது. தேசியவாதிகள் எனப்படுவோர் சொல்லாலும் செயலாலும் புலிப் பாசிசத்தை நேசிப்போர் அல்லது நேசிப்போர் போன்று பாசாங்கு செய்வோர். இதன் எதிர்மறை துரோகிகள் எனப்படுவோர் அதாவது புலிப்பாசிசத்தை சொல்லால், செயலால், உணர்வால் மறுப்போரும், பாசாங்கு செய்வோரும்.

தமிழர் புலம்பெயர்ந்து வாழுகின்ற சகல நாடுகளிலும் துரோகிகள் (பாசிசத்தின் பாஷையில்) இருந்தாலும் சுவிட்சர்லாந்தில் அதன் பட்டியல் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக நீண்டது. ஆனால் பட்டியலின் நீளம் தற்போது குறைந்து செல்கின்றது. இதற்கான அகப்புறக் காரணிகளை எழுத முனைந்தால் விஷ்ணு பன்றி வடிவெடுத்து அடியையும் பிரம்மா அன்னப்பறவையாக முடியையும் தேடிச் சென்ற கதையின் நீளத்திற்குச் செல்லும். சுருக்கமாகச் சொல்வதானால் „கதிரை' என்ற ஒருவார்த்தையுடன் முடித்துக்கொள்கின்றேன்.

„கதிரை' காரணமாக ஏற்பட்ட மாற்றம் புலிகளின் பாட்டுக்கு முன்னாள் துரோகிகளை சுவிட்சாலாந்தில் தாளம் போடவைத்துள்ளது. துரோகிகள் என்போர் முன்பொரு காலத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிக்கின்ற பக்கம் செல்வதில்லை. அதாவது தமிழரின் கலாச்சார (வசூல்) நிகழ்வுகள் எனப்படுகின்ற நிகழ்வுகளில் புலிப்பாட்டு ஒலிக்கும் எனத்தெரிந்தால் அதை தவிர்த்துக்கொள்வர். தவிர்க்க முடியாமல் பாசப்பிணைப்பால் சென்றுவிட நேரிட்டால் அங்கே பெரும் வித்தியாசத்தை காண முடியும். துரோகிகள் அதிகமுள்ள நிகழ்வாக இருந்தால் தேசபக்தர்கள் ஒரு குழுவாக நனைந்த கோழிக்குஞ்சுகள்போலும், தேசபக்தர்கள் நிரம்பி வழியும் நிகழ்வாக இருந்தால் துரோகிகள் அறுவைக்கு கட்டிவைத்திருக்கும் ஆட்டுக்கடாக்கள்போல் அனைவரையும் பார்த்து தலையாட்டிக்கொண்டும் அமர்ந்திருப்பர்.

தமிழ் மக்களின் தேசியத் தலைவர் என்ற மேதகு பிரபாகரன் இந்த பரிதாப நிலைக்கு தனது தலையை தனது கையாலேயே பிளந்து தற்கொலை செய்து கொண்டதன்மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தேசியத் தலைவரின் இத்தற்கொலைத் தியாகத்தின் ஊடாக சுமார் 25 வருடங்களாக பலவீனமாக இருந்த துரோககிளும் 17 மே 2009 டன் பலவீனமான தேசபக்தர்களும் சமநிலைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் தேசபக்தர்களும் துரோகிகளும் ஆங்காங்கே கட்டியணைத்து தழுவிக்கொண்டாலும், கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் இடம்பெற்ற தனியார் நிகழ்வு ஒன்றில் இக்கட்டியணைப்புகள் பெருவாரியாக இடம்பெற்றுள்ளதுடன் புலிகளின் பாட்டுக்கு (முன்னாள்) துரோகிகள் தாளமும் போட்டுள்ளனர்.

சூரிச் மாநிலத்தில் சகலராலும் அறியப்பட்ட வர்த்தகர் ஒருவரின் பிறந்தநாள் வைபவத்திலேயே இவ்வாறு தாளம் போடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் சொல்லின் வேந்தரும் நாணயம் மிக்கவருமான குறித்த வர்த்தகர் துரோகிகளை புலிப்பாட்டுக்கு தாளம்போட வைப்பதற்காக தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்து வைத்திருந்த இசைக்குழுவை 48 மணி நேரத்தில் நிராகரித்துள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது : கடந்த வியாழக்கிழமை இசைக்குழுவின் பிரதான நபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய வர்த்தகர் தம்பி நீங்கள் புலிப்பாட்டு பாடுவீர்கள் தானே எனக் கேட்டுள்ளார். அதிர்ந்துபோன இசைக்குழுத் தலைவர், „அண்ண நாங்கள் அந்தப்பாட்டுகள் இதுவரைக்கும் எந்த நிகழ்விலும் படிக்கவில்லை. ஒருநாள் நேரம் தாருங்கள் நான் பாடகர்களை கேட்டு பதில் சொல்கின்றேன்' எனக் கூறியபோது உங்களால் புலிப்பாட்டு பாட முடியாதென்றால் தங்கள் சேவை தேவைப்படாது என தொலைபேசி அழைப்பை துண்டித்துக்கொண்டாராம் வர்த்தகர்.

இவ்வாறு தொலைபேசியை துண்டித்துக்கொண்ட வர்த்தகர் தனது வர்த்தக நிலையத்தில் மலிந்த கூலிக்கு வேலைக்கமர்த்தியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் உதவியுடன் புலிப்பாடகர்களை அழைத்து அவர்களின் பாடல்களுக்கு முன்னாள் துரோகிகளை தாளம் போடவைத்தாராம்.

1 comments :

பாம்பாட்டி ,  February 12, 2014 at 2:17 PM  

எனக்கு இந்த விடயம் தெரியாமல் போட்டுது. நான் போயிருந்தால் குழல் வாசிச்சிருப்பன். ஏரியாவுக்க நின்ற பாம்பெல்லாம் மண்டபத்தக்க வந்துநின்று ஆட்டம் போட்டிருக்கும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com