Tuesday, February 18, 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கு :3 பேரின் தூக்கு தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை நீண்ட காலத்திற்கு பின் நிராகரித்ததால் இந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு கடந்த 4–ந் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படது. இதில், முருகன், சாந்தன் பேரரரிவாளன் ஆகியோரின் துக்கு தண்டணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், 3 பேரை விடுதலை செய்வது குறித்து மத்திய மாநில அரசுகள் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

3 comments :

Arya ,  February 18, 2014 at 11:30 PM  

தமிழ் இனத்திற்கு கிடைத்த வெற்றியாம்........தமிழ் இனம் என்ன கொலைகார இனமா?

சட்டம் தான் தூக்கில் தொங்கி விட்டது. நாதியற்று போனது தேசம்.
இந்த நாட்டின் தலைவரை சதி செயல் மூலம் கொன்றவர்களுக்கு இந்த நாட்டு தலைவர்கள் தரும் ஆதரவை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது. வேறெந்த நாட்டிலும் காண முடியாத அலங்கோலம் இது.
இக்கொலைகாரர்கள் நாளை வேறு தலைவரை போட்டு தள்ளுவார்கள். இறந்த அப்பாவிகள் குடும்பங்களை பற்றி அவர்களுடைய தற்பொழுதைய வாழ்க்கையை அலசினார்களா?

அவர்கள் குற்றம் செய்யாதவர்கள் என்று நீதிமன்றம் சொல்லவில்லை. தண்டனையைத்தான் குறைத்திருக்கிறது. அதுவும் கருணை மனுக்களை பரிசீலிக்க அளவுக்கு அதிகமான அவகாசம் எடுத்து கொண்டதால் இந்த விபரீதமான தீர்ப்பு இப்போது வந்திருக்கிறது. 'சதிச்செயல் செய்தவன் புத்திசாலி.அதை சகித்து கொண்டிருந்தவன் குற்றவாளி' என்றுதான் சொல்லவேண்டும்.குற்றவாளிகளுக்கு இவ்வளவு ஆதரவு என்றால் இந்த நாடு உருப்படுமா?
எமதர்மா -

மறக்க முடியுமா எங்கள் தேசதலைவரை கொலை செய்த பாவிகளின் பாதக செயலை. உச்ச நீதி மன்றம் மன்னித்தாலும் தெய்வம் மன்னிக்காது .போலி இலங்கை ஆதரவாளர்களின் களியாட்டமே அவர்களது பினனணியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்

Vani Ram ,  February 19, 2014 at 2:08 AM  

தBALASARSWATHண்டனை குறைக்கப்பட்ட கைதிகளுக்காக மகிழ்ச்சி அடைபவர்கள், ராஜீவ்காந்தி படுகொலையின்போது உயிர் இழந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரின் குடும்பங்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? என்று பலியான இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி கண்ணீர் மல்க கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுரு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

தற்போது ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் குறைக்கப்பட்டுள்ளது குறித்து மறைந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பால சரஸ்வதி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

என் கணவரும் பச்சை தமிழர் தான். காவல்துறையில் அப்பழுக்கற்ற வகையில் மிக துணிச்சலாக பணியாற்றிய அதிகாரி. மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது மரணமடைந்தார். அந்த நேரத்தில் நானும், எனது மகள் பபிதா தேவி, மகன் பிரவீன் ராஜேஷ் ஆகியோர் நிற்கதியாக நின்றோம். அப்போது என் மகள் பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்தாள். மகன் 10–ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். என் கணவருக்கு அப்போது வயது 44.

தூக்கு தண்டனை கைதிகளுக்காக முழக்கம் எழுப்பிய தலைவர்கள் எங்களுக்கு ஆறுதல் கூற வரவில்லை. முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில்தான் எனது கணவருக்கு முழு பென்சன் அளித்து உத்தரவிடப்பட்டது. அதன் காரணமாகத்தான் எங்கள் குடும்பம் தத்தளிக்காமல் வாழ்க்கை நடத்த முடிந்தது.

என்ன பதில் கூறப்போகிறார்கள்?

இப்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினரும் இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த என் கணவர் மற்றும் அவரைப்போன்ற மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் என்ன பதிலை கூறப்போகிறார்கள்?.

ராஜீவ்காந்தியோடு உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு கருணை உதவிகளை செய்துள்ளது. மத்திய அரசாங்கம் இதுவரை திரும்பி பார்க்கவில்லை. இனிமேலாவது எங்கள் குடும்பத்தை போன்ற மற்றவர்களுக்கும் உதவிகளை செய்ய நினைக்க முன்வருவார்களா?.

இவ்வாறு பால சரஸ்வதி கூறினார்.

முகமது இக்பால் எஸ்.பி,

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.முகமது இக்பால் உட்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மறைந்த எஸ்.பி.முகமது இக்பாலின் மகன் ஜாவீத் இக்பால் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:–

நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களின் தண்டனையை ரத்து செய்தது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். அவருடன் கொல்லப்பட்ட 14 பேர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதி வழங்கப்போகிறார்கள். நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் தான். அதுவும் தமிழர்கள் தானே. சிறையில் இருந்தவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில அரசியல் கட்சியினர், எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? வரும் காலங்களிலாவது நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும் குரல் கொடுக்க அரசியல் கட்சியினர் தயங்க கூடாது. அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களிடம் நம்பிக்கையை அரசியல் கட்சிகள் பெற முடியும். இந்த தீர்ப்பை கேட்ட என்னுடைய வயதான தாயார் இன்று (நேற்று) இதை நினைத்து மேலும் வருந்தும் சூழல் தான் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Alex Eravi February 19, 2014 at 5:38 AM  

இனி தமிழக விபச்சார அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும்… வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு (உள்ளிற்குள் கோவணம் கட்டியிருக்கிறார்களோ… கோடு போட்ட காற்சட்டை போட்டிருக்கிறார்களோ… அது வேறை) தம்மால் தான் இவ் மூவரினதும் தண்டனை குறைக்கப்பட்டதாக உளறத் தொடங்குவர்…

காங்கிரசில் இருக்கும் சிதம்பரம் உட்பட்ட அரசியல் வாதிகளும்… உளறுவர்…

மோடியும் தன் பங்கிற்கு உளறினாலும் தப்பில்லை…

ஆனால், கிளைமாக்ஸ் இனித்தான் உள்ளது…
இவர்கள் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ள நிலையில்…
ஜெயலலிதா இவர்களை விடுதலை செய்தால்… தான் என்ன புலுடா விட்டு தனது அரசியல் விபச்சாரத்தை தொடருவது என்று கருணாநிதி ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் வீடுகளில் இருந்தோ… மடியில் இருந்தோ… மாறி மாறி யோசித்துக் கொண்டு இருப்பார்…

Deal maker சுப்பிரமணியம் சுவாமியும்… இன்னும் வெளியில்… தன்னைக் காப்பாற்றிக் கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்…

நாபா கொலைக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள் பற்றி கதையில்லை…

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com