Friday, February 7, 2014

பச்ச மரத்தில் ஆணி அடித்த ஜேர்மன் புலிகள் சட்டச்சிக்கலில்.

இலங்கையின் சுதந்திரதினம் வெகு விமரிசையாக கேகாலையில் கொண்டாடப்பட்டது. சர்வதேச நாடுகளெங்கிலுமுள்ள இலங்கை தூதரகங்களில் திட்டமிட்டபடி கொண்டாடப்பட்டும் வருகின்றது. சர்வதேச நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் சிறப்பம்சம் யாதெனில், இலங்கை அரச தரப்பினருடன் இணைந்து முன்னாள் புலிப்பினாமிகளும் கொண்டாடி வருவதாகும்.

புலிகளின் பெரும்பகுதியினர் அரசுடன் இணைந்து கொண்டாலும் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி தமது பிழைப்பை கொண்டு செல்லும் சிலரால் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது யாவரும் அறிந்தது.

அந்த வரிசையில் கடந்த 04.02.2014 இரவு பெர்லின் இலங்கைத் தூதுவராலயம் முன்பாக நான்கு சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இரண்டு சுவர் ஒட்டிகள் வீதியில் இரு மரங்களிலும், இரண்டு சுவர் ஒட்டிகள் மின்சாரக்கம்பதிலும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் கடந்தகாலங்களில் புலிகளால் புறக்கணிக்கப்பட்டதும் அதற்கு எதிரான பிரச்சாரங்கள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டதும் இரகசியமான விடயங்கள் அல்ல. ஆனால் மேற்படி நடவடிக்கைகளை பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மேற்கொண்ட பலர் இலங்கை அரசுடன் இணைந்து கொண்டுள்ளனர். இதனூடாக மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர் அல்லது புலிகளின் உண்மை முகத்தினை மக்கள் கண்டு கொண்டுள்ளனர் எனலாம்.

ஆயிரக்கணக்கான மக்களை திரட்டிய புலிகளுக்கு இன்று ஒரு சில 10 பத்து மக்களைக்கூட திரட்ட முடியாத நிலை தோன்றியுள்ளது என்பது பேர்லின் சுவரொட்டிச் சம்பவம் எடுத்துரைக்கின்றது. நான்கு சுவரொட்டிகளை அநாமதேயமாக பொழுது விடியும்போது ஒழிந்திருந்து ஒட்டிவிட்டு நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளை மக்கள் ஒட்டியுள்ளார்கள் என தமது ஊதுகுழல்கள் ஊடாக பொய்பிரச்சாரம் செய்யும் துர்பாக்கிய நிலை.

எது எவ்வாறாயினும் சுவரொட்டியை யார் ஒட்டினார்கள் என்பது அப்பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத்தூதுவராலயம் ஜேர்மனிய பொலிஸாரைக் கேட்டுள்ளதாக இலங்கைநெட் அறிக்கின்றது.

சுவர் ஓட்டிகளுக்கு பொறுப்பாளிகள் யார் என்பது அச்சிடப்பட்டிருக்கவேண்டும். அனால் இங்கு குறிப்பிடப்படவில்லை.

சுவரொட்டிகளை ஒட்டும்போது பெறப்படவேண்டிய அனுமதி பெறப்படவிலை;லை.

அனுமதியின்றி மரங்களில் ஆணி அடிப்பது ஜெர்மனியில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் , இவ்விதிமுறை மீறப்பட்டுள்ளது.

என்ற மூன்று குற்றச்சாட்டுக்களின் பெயரில் இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிசிரிவி உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இச்செய்திளை வெளியிட்டிருந்த ஜேர்மனியை தளமாக கொண்ட இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த புகைப்படங்கள் சோதிக்கப்பட்டபோது, சிசிரிவி தரவுகளுடன் பொருந்துவதாகவும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்ஜிதமாகியுள்ளது. அதனடிப்படையில் குறித்த இணையத்தள உரிமையாளருக்கும் மேற்படி சட்டவிரோதச் செயற்பாட்டுக்குமுள்ள தொடர்புகள் விரைவில் வெளிச்சத்திற்கு வருமென நம்பப்படுகின்றது.


1 comments :

மகா தமிழ் ஈழம் ,  February 8, 2014 at 1:36 AM  

இந்த புலி பரதேசிகள் தாங்களே படம் ஒட்டி, தாங்களே படம் எடுத்து, தாங்களே இணைய தளத்தில் வெளியிடுவார்கள் ஜெர்மனிய அரசு இலங்கையை கண்டித்து சுவர் ஒட்டிகள் ஒட்டியது என்று. தமிழ்நாட்டு கோமாளிகளும் அதை உண்மை என்று நம்பி ஜெர்மனிய அரசு இலங்கைக்கு கடும் எச்சரிக்க செய்து சுவர் ஒட்டிகள் ஒட்டியது என்று செய்தி வெளியிடுங்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com