Wednesday, February 26, 2014

இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் சர்வதேச சமூகத்திற்கு பிரிட்டிஸ் பிரஜையொருவர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்!

இலங்கை தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் சர்வதேச சமூகத்திற்கு பிரிட்டிஸ் பிரஜை யொருவர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். பிரிட்டிஸ் பிரஜையான ரிச்சட் மூடி மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கைக்கு எதிராக இலங்கையிலுள்ள தேச துரோகிகள் சர்வதேச சமூகத்திடம் இலங்கை மீது யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்தும் அதே நேரம் பிரிட்டிஸ் பிரஜையொருவர் இலங்கை சார்பில் முன்நிற்பது அனைத்து தரப்பினரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

எல்ரிரிஈ ஆதரவில் இயங்கும் புலம்பெயர் தமிழர் அமைப்பு இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் உண்மை நிலையை சர்வதேசத்திற்கு எடுத்து செல்ல ரிச்சட் மூடி தலைமையில் இலங்கையின் திரைப்பட இயக்குநர் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு முன்னர் பிரிட்டனில் இத்திரைப்படத்தை காட்சிப்படுத்துவதற்கு தேவையாக இருந்த போதிலும் அவர்களுக்கு இவ்வகையான சந்தர்ப்பத்தை வழங்காமல் இருப்பதற்கு பிரிட்டிஸ் திட்டமிட்டுள்ளது. சென்னை யிலுள்ள பிரிட்டிஸ் உயர்தானிகர் அலுவலகத்தின் ஊடாக பிரித்தானிய செல்வதற்கு இக்குழு முயற்சித்த போதும் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

ரிச்சட் மூடி இலங்கை சார்பில் இதற்காக முன்வந்துள்ளார். அவர் இலங்கை தொடர்பாக இத்திரைப்படத்தை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் முக்கிய பெண் தலைவியான ஜயவதனி எல்.ரி.ரி.ஈ. யினர் தொடர்பாக கூறும் உண்மையான தகவல்களை இந்த திரைப்படத்தில் உள்ளடக்கியுள்ளார்.

புதுமாத்தரன் இறுதிச் சமர்விலும் ஜயவதனி இணைந்திருந்தார். எல்.ரி.ரி.ஈ. யினர் மேற்கொண்ட பீரங்கி தாக்குதலில் அவர் காயமடைந்த போது அவரை படையினரே பாதுகாத்துள்ளனர். அவருடைய கூற்றுப்படி அவரை மீட்டெடுக்க சென்ற பல இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர். அவர்களது உயிரை துச்சமாக மதித்து பாதுகாத்த விதத்தினை ஜயவதனி இத்திரைப்படம் ஊடாக விபரித்துள்ளார்.

அத்துடன் எல்ரிரிஈ கடற்புலி படையிலிருந்த தமது கணவர் மூலம் கிடைத்த குழந்தை கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை மருத்துவர்களினால் வளர்த்தெடுத்த விதத்தையும் இவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்களும் இத்திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் மனிதாபினமான நடவடிக்கையை இத்திரைப்படம் தெளிவுப்படுத்தியுள்ளது. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஒரே நாளில் பதலளிக்க முடியாத போதிலும் இலங்கை தொடர்பாக பல தகவல்கள் இத்திரைப்படத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைக்காக இது போன்ற தியாகத்தை செய்த ரிச்சர் மூடி இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த போது அவரை வரவேற்பதற்கு திரைப்படத்தை தயாரித்த அனைவரும் அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com