Thursday, February 13, 2014

கர்ப்ப காலத்தில் பெண்கள் புகைத்தால் பிறக்கும் குழந்தை ஓரினச் சேர்க்கையாளராகலாம்!

பெண்கள் கர்ப்பகாலத்தில் புகைப்பிடிப்பதால் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தை ஓரினச் சேர்ச்கையாளராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாக பிரபல நரம்பு உயிரியலாளர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த சில வருடங்களாகவே மேற்குறித்த விடயம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்று வந்தநிலையில் கர்ப்பத்திலுள்ள குழந்தையின் பாலியல் உறவு தொடர்பில் தாயின் வாழ்க்கை முறை தாக்கம் செலுத்துவதாக 69 வயதான ஆம்ஸ்டெர்டம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியும் பேராசிரியர் டிக் ஸ்வாப் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 

ஆனாலும் இதற்கு ஆதாரபூர்வமான ஆதரங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தனது புத்தகத்தில் தெரிவிக்கின்றார்.

இதே வேளை மூளையுடன் தொடர்புட்ட வைத்தியரான கலாநிதி ஸ்வாப் வெளியிட்டுள்ள கர்ப்ப காலத்தில் மூளை வளர்ச்சி தொடர்பான சர்ச்சைக்குரிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கர்ப்ப காலத்தில் மது, போதைப் பொருள் பாவனை போன்ற மோசமான நடைமுறைகளால் குழந்தையின் நுண்ணறிவு குறைகின்றது.

இதனைவிட புகைத்தல் பெண் குழந்தைகள் ஓரினச் சேர்க்கையாளராக மாறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது என்பதுடன் கர்ப்பமான பெண்களின் மன அழுத்தமும் பாலியல் தொடர்பில் தாக்கம் செலுத்துகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com