Saturday, February 8, 2014

மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் யாழ். மாவட்டத்தில் விபச்சாரம்!

யாழ். மாவட்டத்தில் விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக நடைபெறும் மசாஜ் நிலையங்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ள விடுதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு புலனாய்வு பிரிவினரால் விபரங்கள் சேகரிப்பட்டு வரும் அதேவேளை, குறித்த விடுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கலாசாரத்தினை நாங்கள் உட்பட அனைவரும் மதிக்கின்றோம் இதனால் அக்கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகள் பலவற்றினை நாங்கள் கடந்த காலங்களில் தடுத்து நிறுத்தியுள்ளோம்.

எனவே, இவ்வாறான மசாஜ் நிலையம் இயங்குகின்ற சம்பவம் தொடர்பாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தற்போது தகவல்களை சேகரித்து வருவதுடன், விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் மற்றும் கலாசார சீரழிவுகளுக்கு இடமளிக்கும் விடுதிகள் தொடர்ந்து புலனாய்வு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது எனக்குறிப்பிட்டார்.

மேலும் தற்போது சேகரிக்கப்படும் தகவல்கள் உறுதிப்படுத்தும் நிலையில் உடனடியாக நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள் என்பதுடன் குற்றத்தினை புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com