Wednesday, February 5, 2014

நான் ஜெனிவா செல்வது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்க முடியாது! அனந்தி எழிலன் சீற்றம்!

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கின்ற மனித உரிமைகள் மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சதிதரன் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இது தொடர்பில் இலங்கைநெட் அனந்தி சசிதரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜெனிவா செல்லவேண்டும் என நான் யாரிடமும் கோரவில்லை. அங்கு செல்வதற்கு நானே பொருத்மானவள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. ஆனால் ஜெனிவா செல்வது தொடர்பாக நானே முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது என்றும் கூறினார்.

அவ்வாறாயின் உங்களுக்கு ஜெனீவா செல்ல ஆர்வம் இல்லையா எனக் கேட்டபோது, எதைச் செய்வதாயினும் எனது பாதுகாப்பே முக்கியமானது என்றும் தனக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகவும் கூறினார்.

மக்களுக்கு ஜெனீவா தொடர்பான ஓர் எதிர்பார்ப்பை தமி்ழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் நீங்கள் அங்கு சென்று உண்மைகளை தெரிவிக்கவேண்டிய தேசத்து கடமையை செய்ய மறுக்கின்றீர்கள், அத்துடன் உங்களுக்கு உள்ள அச்சுறுத்தல் என்ன? அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க முடியாதாயின் எதற்காக அரசியலினுள் பிரவேசித்தீர்கள் என வினவியபோது அனந்தி எழிலன் பதிலளிக்காது தொலைபேசி இணைப்பை துண்டித்துக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக, சாட்சியமாக இருக்கப்போகின்றேன், நீதி கேட்கப்போகின்றேன் என மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அனந்தி முதலாவது சுற்றுலேயே முரண்டு பிடிப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

எனக்கு ஜெனிவாவில் அச்சுறுத்தல் என்பதன் அர்த்தம் என்ன? தான் அங்கு சென்றால் தனது கணவன்தான் யுத்தம் ஒன்று ஆரம்பமானதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர் என்ற கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு பதிலளிக்கமுடியாதுபோகும் என்ற அச்சமாக இருக்கலாம? அன்றில் பயங்கரவாதி ஒருவருனுடன் குடும்பம் நடாத்தி பல்வேறு குற்றங்களுக்கு உடந்தையாக இருந்திருக்கின்றார் என்ற விசாரணைகள் தன்மீது ஆரம்பமாகலாம் என்ற அச்சத்தில் இருக்கின்றாரா?

4 comments :

Anonymous ,  February 6, 2014 at 12:33 AM  

Ananthy and Elilan are terrorist, Sri Lankan government can ask regarding there terror activitys in Sri Lanka when LTTE was a live!

How can face this situation in Geneva???

Anonymous ,  February 6, 2014 at 8:07 AM  

ஜெனீவா சென்றாலும் ஏதோ ஆங்கிலம் கதைக்கத் தெரிந்த மாதிரி. அதுக்கும் இனி ஒரு நல்ல அரசியல் தெரிந்த மொழி பெயர்ப்பாளரை அல்லவா கொண்டு செல்லவேண்டும், தமிழ்ச்செல்வன் கொண்டு சென்றது போல. மற்றவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க சிரிச்சு தலையாட்டிப் போட்டு வரவேண்டியதுதான். அதிலும் விட தனிய மொழி பெயர்ப்பாளரை அனுப்பலாம் செலவும் குறைவு. நன்றாகவும் கதைப்பார்கள். (VSDrammen)

Anonymous ,  February 6, 2014 at 9:37 AM  

be a mother not a politiker why didi you come to politik with your husband name you are hetting money from srilankan government be them faithfully

Anonymous ,  February 6, 2014 at 12:24 PM  

அரசியலே என்னவென்று தெரியாதவர்கள், பதவியோன்றே நோக்கம் என்பவர்கள், மக்களை ஏமாற்றி எப்படி வாழலாம் என்ற வித்தையைக் கற்றுக் கொண்டவர்கள், மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி தம் மக்கள் (தமது பிள்ளைகள்) நலம் ஒன்றே நோக்கானவர்கள், பயங்கரவாதத்தை ஆதரித்தவர்கள், பயங்கரவாதிகள், பச்சோந்திகள், புல்லுரிவிகள், மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்தவர்கள் என எல்லாவகை பம்மாத்துக்களையும் கொண்டது தான் தமிழர் தேசியக் கூத்தமைப்பு.

இவர்களின் கூத்துக்களுக்க காரணம் காண முயல்வது என்பது அர்த்தமற்ற செயல்.

கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தொலைபேசி இணைப்பை துண்டித்துக் கொள்பவர்களுக்கு அரசியல் ஒரு கேடா?

இவர்களையே மீண்டும் மீண்டும் தெரிவு செய்து ஏமாறுவது இலங்கைத் தமிழரின் தலை விதியாய்ப் போய் விட்டது.

ஸ்ரீதரன், ரொரொண்டோ, கனடா

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com