Tuesday, February 25, 2014

தமிழக அரசை உடனடியாக கலைக்கவேண்டும். சுப்ரமணிய சுவாமி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானித்தமைக்கு, தமிழக அரசை கலைக்க வேண்டுமென, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

தினமலர் நாளிதழுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே திரு. சுப்ரமணியம் சுவாமி இதனை தெரிவித்துள்ளார். ஒரு மாநில அரசு சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு காரணமாக இருந்தால், அந்த அரசை கலைப்பதற்கு, சட்டத்தில் இடமுண்டு. ராஜிவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தை ஒரு தரப்பினர் பாரதூரமாக நோக்கவில்லை. இதனால் அதனை கொண்டாடுகின்றனர். அப்படி கொண்டாடுவதற்கு நாட்டின் மீதும், இந்திய இறையாண்மை மீதும் கடுகளவேனும் அக்கறையில்லை. அப்படிப்பட்டவர்கள் நினைத்ததை எல்லாம் செய்ய, எம்மால் அனுமதிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஆதரிக்கக்கூடாது என்ற சாதாரண சிந்தனை கூட இல்லாதவர்கள், தமிழக முதல்வர் பொறுப்பில் அமர்ந்தார்கள்.

இது, தமிழகத்தின் துரதிஸ்டமே. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்களே, சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் சவாலாக அமைந்திருப்பது, வேதனையளிக்கின்றது. இவர்களின் செயல்களை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. 1990ம் ஆண்டு சட்டத்தை கையில் எடுத்து, கருணாநிதி ஆட்டம் போட்டார். பயங்கர புலிகளை தமிழகத்தில் நடமாட விட்டு, சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கினர். அதனால், தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது அரசை கலைக்க வைத்தேன். இன்றும் நான் செய்த அந்த காரியத்தை நினைத்து மனமகிழ்கின்றேன். அன்று அதனை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், தமிழகத்தில் பல அசம்பாவிதங்கள் நடந்திருக்கும். விடுதலைப் புலிகள் விடயத்தில் ஜெயலலிதா திடீர் ஆர்வம் காட்டி வருகின்றார். அதன் விளைவு, விரைவில் அவரது ஆட்சியையே காவு கொள்ளப்போகிற்து. தமிழர்களுக்கு யார் தலைவராக இருக்க வேண்டுமென்ற போட்டியில், ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாறி மாறி தவறு செய்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியை விரைவில் கலைத்துவிட்டால், அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும். அதற்கான முயற்சிகளில் தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  February 26, 2014 at 8:16 AM  

Very good Mr.Swamy. You are a Indian nation! Not like a, people who living and doing politics by Sri Lankan Tammils.

Jeyalalitha supporting LTTE and terrorist, but not for tamils people who living in Sri Lanka.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com