Monday, February 3, 2014

வவுனியாவில் கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டம்: கொடும்பாவியும் எரிப்பு

இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து கடந்த 29 ஆம் திகதி ஆர்பாட்டம் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இவ் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் றிசாட் பதியூதின் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டனர்.

அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் தமிழ் - முஸ்லிம் உறவைச் சிதைத்து கூட்டமைப்பு தனது இருப்பை தக்க வைக்க முயல்வதாகவும் கூறி இன்று காலை 10.45 மணக்கு மன்னார் வீதியில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்த ஆர்பாட்டம் மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சுலோகங்களை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசஅதிபர் அவர்களிடம் மகஜர் கையளித்ததுடன் அதன் பிரதிகளை இந்தியப் பிரதமர் மற்றும் இஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் அனுப்பி வைத்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனக்குரோதத்தை வளர்க்கும் செயற்பாட்டைக் கண்டித்து கூட்டமைப்பின் கொடும்பாவி ஒன்றும் எரிக்கப்பட்டது. செருப்புகளை கழற்றி கூட்டமைப்பின் மேல் உள்ள ஆத்திரத்தை கொடும்பாவியில் காட்டிய மக்கள் அதனை துண்டு துண்டாக்கி எரித்து மகிழ்ந்தனர்.

இதில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com