Sunday, February 23, 2014

தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களாக எஞ்சியிருப்போருடன் கனடாவின் புனிதமற்ற கூட்டணி.ஷமிந்திர பேர்டினன்டோ

எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மூத்த சகாக்களுடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் இரண்டு உயர்மட்டக் குழுக்களை,நோர்வேயினால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் 2002 பெப்ரவரியில் இறுதி செய்யப்பட்டதும் நியமனம் செய்தார். இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு, அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் என்பனவும் உத்தரவாதம் வழங்கியிருந்தன.

வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்வது என்பதுதான் அந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம். குறைந்த பட்சம் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்கு கூட ஐ.தே.க அரசாங்கம் அக்கறை காட்டவில்லை.

இரண்டு குழுக்களில் ஒன்றை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பிரதிநிதிப்படுத்திய அதேவேளை, மற்றைய குழுவின் பணி அதை மேற்பார்வை செய்வதாக இருந்தது. பின்னைய குழு பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய லெப்ரினன்களில் ஒருவரான கஸ்ட்ரோவின் மேற்பார்வையின் கீழ் செயற்பட்டு வந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் பயங்கரமான ஈழத் திட்டத்துக்கு விசுவாசமானவர்கள் இந்த இரண்டு குழுக்களிலும் பிரதிநிதித்துவம் வகிப்பதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

பிரபாகரனின் உயரிய மூலோபயமான ஈழக் கருத்தினைகனடாவை தளமாகக் கொண்ட நேரு குணரட்னம் என்பவர், வன்னியில் உள்ளneru Gunaratnam எல்.ரீ.ரீ.ஈ தலைமையின் நன்மதிப்பை பெற்றவராவார். எனவே அவரது பெயர் இரண்டு குழுக்களிலும் இடம் பெற்றது. எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் கலந்தாலோசிப்பதற்காக குணரட்னம் இரண்டுமுறை 2002 மற்றும் 2003ல் வன்னிக்கு விஜயம் செய்துள்ளார். கனடாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயின் முக்கிய மனிதர் என்பதனால் யுத்த நிறுத்த காலத்திலும் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த வருடங்களிலும் (2006 முதல் 2009 வரை) எல்.ரீ.ரீ.ஈ ஸ்ரீலங்கா இராணுவத்துடன் யுத்தம் செய்ததினால் குணரட்னத்துக்கு தனது பிடியில் வைத்து செயலாற்றுவதற்கு கணிசமான அதிகாரம் வழங்கப் பட்டிருந்தது. மோதலின் பொழுது கனடாவிலிருந்து நடத்தப்படும் செயல்பாடுகளுக்கும் மற்றும் தற்போது நடந்துவரும் ஸ்ரீலங்காவை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளிலும் குணரட்னம் முக்கியமான பங்கினை ஏற்றுள்ளார்.

மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈயின் யுத்த அமைப்பு வன்னி கிழக்கு முன்னிலையில் தோல்வியடைந்துபோது, தனிநாடு கோரியவர்கள் தங்கள் பிரச்சாரத்தின் திசையை மாற்றிக் கொண்டார்கள். ஆயுதம் வாங்குவதற்காக நிதி திரட்டுவதற்குப் பதிலாக புலம்பெயர்ந்தோர்கள், மேற்கத்தைய சக்திகள், இந்தியா, தென்னாபிரிக்கா போன்றவற்றின் ஆதரவை பெறுவதற்காக தங்கள் முழுக் கவனத்தையும் பயன்படுத்தலானார்கள். புதிய திட்டமாக இப்போது ஸ்ரீலங்காவை ஒரு சர்வதேச போர்க் குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன் வலிந்து இழுக்க முயற்சித்து வருகிறார்கள்.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்க உள்ள ஐநா மனித உரிமைகள் சபையின் 25வது அமர்வில், ஒரு தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்காக அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணியுடன் கனடா இணைவதைத் தொடர்ந்து, ஈழத் திட்டத்துக்கு துணையானவற்றை கனடிய காரணிகளுடன் விவாதிக்க பொருத்தமான நிலை உருவாகிறது.

போரை நடத்துவதற்கான தனது அடிப்படை ஆதாரத்தை எல்.ரீ.ரீ.ஈ இழந்து விட்டிருப்பதால், ஒரு மரபு ரீதியான இராணுவ அச்சுறுத்தலை அதனால் இனிமேலும் ஏற்படுத்த முடியாது, எஞ்சியுள்ள எல்.ரீ.ரீ.ஈயின் எச்சங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள், ற்றும் ஐநா உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் வலிமை மிக்க எதிரியாக வியக்கத்தக்க சக்தியுடன் தொhடர்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

வளர்ந்துவரும் சக்தியின் கவனத்துடன் ஈழ விவகாரத்தை பரப்பி வரும் கனடியக் காரணிகளை இங்கு ஆராய்வோம்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் அதன் பக்கம் உள்ள தவறுகள் காரணமாக கள யதார்த்தங்களை அலட்சியம் செய்து வருவது போலத் தெரிகிறது. மேற்கத்தைய சக்திகள் அடுத்த ஜெனிவா அமர்வில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக மற்றொரு பிரேரணையை இந்த எல்.ரீ.ரீ.ஈ எச்சங்களின் விருப்பத்தின்படியே கொண்டு வருகிறது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். கனடாவிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ எச்சங்கள் ஜெனிவா தீர்மானத்தின் பின்னால் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன. வரப்போகும் ஜெனிவா தீர்மானத்தின் பின்னாலுள்ள உந்து சக்தி அமெரிக்காதான் என்று பலரும் எண்ணினாலும், கனடா மற்றும் பிரித்தானியா என்பனவற்றின் உள்ளீடுகள் இல்லாமல் அது யதார்த்தமாகி இருக்காது.

கனடாவின் கன்சர்வேட்டிவ் அரசாங்கம், எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அதன் முன்னணி நிறுவனமான உலகத் தமிழர் இயக்கம்(டபிள்யு.ரி.எம்) என்பனவற்றை முறையே ஏப்ரல் 2006 மற்றும் ஜூன் 2008 ஆகிய காலங்களில் பயங்கரவாத இயக்கம் எனப் பட்டியலிட்டிருந்தாலும்கூட, அந்த குழுக்கள் தொடர்ந்து தழைத் தோங்கி வளர்ந்துள்ளன.

ஏப்ரல் 2006ல், எல்.ரீ.ரீ.ஈக்கு யராவது நிதியுதவி வழங்குவது தெரியவந்தால் அவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனையும் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு நிதி சேகரிப்பு மற்றும் உதவிகளைச் செய்பவர்கள் 14 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கனடா அறிவித்திருந்த போதிலும் புலிகளின் நடவடிக்கைகள் தொய்வின்றி தொடர்கின்றன. அப்போதிருந்த பொதுசன பாதுகாப்பு அமைச்சரான ஸ்ரொக்வெல் டே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கவும் மற்றும் நாடுகடத்தவும் பயன்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தார். கனடாவிலுள்ள மிகப்பெரிய ஸ்ரீலங்கா தமிழ் சமூகம் எல்.ரீ.ரீ.ஈ ஆர்வலர்களை கண்டிக்க வேண்டும் என்று அமைச்சர் டே வலியுறுத்தியிருந்தார். எல்.ரீ.ரீ.ஈ மீதான தடையை நியாயப்படுத்தும் வகையில், கனடிய தமிழர்களை நிதிப் பங்களிப்பு செய்யும்படி பலவந்தப் படுத்துவதற்கு எல்.ரீ.ரீ.ஈ ஆர்வலர்கள் வன்முறை அச்சுறுத்தலில் ஈடுபடுகிறார்கள் என்று டே கூறியிருந்தார்.

கன்சர்வேட்டிவ் எல்.ரீ.ரீ.ஈயினை தடைசெய்து ஆறு வருடங்களின் பின்னர். அந்த குழுவின் ஆர்வங்களில் பங்கெடுத்திருந்தவர்கள் ஈழப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் புலம்பெயர் தலைவர்களாக எழுச்சி பெற்றார்கள். சுவராஸ்யமான வகையில்,முன்னர் உலகத் தமிழர் இயக்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பனவற்றைப் பிரதிநிதிப்படுத்தியவர்களில் சிலர் இப்போது பகிரங்கமாக கனடிய அரசியல்வாதிகளுடன், குறிப்பாக கன்சர்வேட்டிவ் கட்சியினருடன் செயற்படுகிறார்கள்.

எல்.ரீ.ரீ.ஈ, கன்சர்வேட்டிவ்களைப் பாராட்டுகிறது

கனடிய ஊடகம் ஒன்று, 2013 ஒக்ரோபர் 28ல் கனடா பாராளுமன்றத்துக்கு எதிரில் பிரதமர் ஸ்ரீபன், மற்றும் வெளிவிவகார மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைச்சர் ஜோண் பெயார்ட் ஆகியோரை, கடந்த நவம்பரில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை(சி.எச்.ஓ.ஜி.எம்) புறக்கணிப்பதாக அவர்கள் மேற்கொண்ட தீர்மானத்தை பாரட்டுவதற்காக எல்.ரீ.ரீ.ஈயினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கன்சர்வேட்டிவ் அரசியல்வாதி பற்ரிக் பிறவுண் அவர்களுடன் நேரு குணரட்னம் இருப்பதை படம் பிடித்திருந்தது.

எல்.ரீ.ரீ.ஈ அனுதாபி என மிகவும் பெயர்பெற்ற பிறவுணுடன் குணரட்னம் ltte trainingமும்முரமான உரையாடலில் ஈடுபடுவதை அதில் காணக்கூடியதாக உள்ளது. குறைந்தது நான்கு கனடிய அமைச்சர்கள் மற்றும் டசினுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், குணரட்னம் உட்பட 300 எல்.ரீ.ரீ.ஈ ஆர்வலர்களுடன் அதில் கலந்து கொண்டிருந்தார்கள். உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்டபோது குணரட்னம் அதன் செய்தித் தொடர்பாளராக இருந்தார் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். பிறவுணுக்கு எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்பு இருப்பதை காரணம் காட்டி அவருக்கும் அவரது பாராளுமன்ற சகாவான போல் சந்திரா என்பவருக்கும் மோதல் முடிவடைந்த மே 2009ல் வன்னிக்கு விஜயம் செய்வதற்கு விசா வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுத்திருந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் மற்றொரு அனுதாபியான லிபரல் கட்சியின் கனடா பாராளமன்ற உறப்பினரான போப் ரே பண்டாரநாயக்க விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார். பாராளுமன்றத்துக்கு எதிரில் நடந்த கூட்டத்துக்கு கனடிய அரசியல்வாதிகள் சமூகமளித்திருந்தது கன்சர்வேட்டிவ் அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் உலகத் தமிழர் இயக்கம் என்பனவற்றை தடை செய்துள்ளது ஒரு கோமாளித்தனம் அல்லாது வேறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது (“கனடிய கீழ் மட்ட தூதுக்குழு யாழ்ப்பாணத்துக்க விஜயம் செய்யவுள்ளது கனடியப் பிரதமரை இந்திய வம்சாவழியினரான ஒரு தன்சானியர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்” என்ற செய்தி 2013 நவம்பர் 8ந் திகதிய த ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.)

கனடியர்களுக்கு ஆயுதப் பயிற்சி

கனடியர்களாக உள்ள சில ஸ்ரீலங்கா வம்சாவழியினர், எல்.ரீ.ரீ.ஈ பயிற்றுனர்களின் கீழ் ஆயுதப் பயிற்சி பற்றவர்கள் என்பதை கனடா வசதிக்கு ஏற்ப மறந்து விட்டது. உண்மையில் கனடிய வெளிவிவகாரம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைச்சர் ஜோண் பெயார்ட்டின் பாராளுமன்றச் செயலாளரான தீபக் ஒபராய், மோதல் முடிவடைந்த மே 2009ல் கள நிலமைகளை ஆராய்வதற்காக குறிப்பாக இராணுவம் கைது செய்திருந்த இரண்டு கனடியர்களைச் சந்திக்க வன்னிக்குச் சென்றிருந்தார். எல்.ரீ.ரீ.ஈக்காக போராடியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த இரண்டு கனடியர்களும் கைது செய்யப்பட்டிருந்தார்கள். தன்சானியாவில் பிறந்த ஒபராய் கனடிய பாராளுமன்றத்தில் உள்ள மிகவும் மூத்த இந்திய வம்சாவழிப் பாராளுமன்ற உறுப்பினராவார், இவர் 2013 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில்(சி.எச்.ஓ.ஜி.எம்) பிரதமர் ஹாப்பரை பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தார். ஒபராயின் ஒரு வார கால தங்கியிருப்பின்போது, மோதலில் இறந்த சிறுபான்மையினத்தவருக்காக ஆனையிறவில் ஒரு மலர்வளையத்தை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். ஒபராயின் செய்கை எல்.ரீ.ரீ.ஈயினை சாந்தப்படுத்தும் ஒரு செயலாக இருந்தது.

உகத் தமிழர் இயக்கத்தை ஜூன் 2008ல் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது, இரண்டு வருடங்களின் பின் நாட்டில் முன்னணி அமைப்பாக விளங்கும் கனடிய தமிழர் தேசிய பேரவை (என்.சி.சி.ரி) தோன்றுவதற்கு வழி ஏற்படுத்தியது. உலகத் தமிழர் இயக்கத்தின் கொள்கைகளை என்.சி.சி.ரி பகிரங்கமாக பரப்பி வந்தபோதிலும் கூட கனடிய அரசியல் நிறுவனங்கள் அதனுடன் நெருக்கமாகப் பணியாற்றி வந்தன. பாரளுமன்ற உறுப்பினாகளான ஒபராய் மற்றும் பார்ம் கில் ஆகியோர், என்.சி.சி.ரி யுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக பரவலாக நம்பப்பட்டது, அதனால் அதன் செய்பாடுகளுக்கு உதவுவதற்கு இவர்கள் பொறுப்பாக இருந்தார்கள். கனடாவிலுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களின் அடிப்படையில் தெரியவருவது, ஒபராய் மற்றும்; நேரு குணரட்னம் ஆகியோரிடையே ஒரு சந்திப்பு ஏற்பட பாராளுமன்ற உறுப்பினர் கில் உதவி செய்திருந்தாராம். சுவராஸ்யமாக கொழும்பில் தூதுவ பணிகளை மேற்கொண்டுள்ள சில கனடிய இராஜதந்திரிகள், கனடிய அரசியல்வாதிகள் முன்னிலையில் உயர்மட்ட என்.சி.சி.ரி பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளதாக நம்பப்படுகிறது. கொழும்பிலுள்ள கனடிய உயர் ஸ்தானிகர் ஷேர்லி வைற், என்.சி.சி.ரி யின் பிரதிநிதிகளை கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் சந்தித்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த வருடம் ஜனவரியில் ஒன்ராரியோ மாநில பிரதமர் கத்லீன் வைன், பயங்கரவாத அமைப்பாக கூட்டாட்சி பட்டியலிட்டுள்ள ஒரு அமைப்பின் முக்கிய பிரதிநிதியான நேரு குணரட்னத்துடன்; ஒரு ரொhன்ரோ கோவில் விஜயத்தின்போது உரையாடியதாக ஒரு கனடிய ஊடகம் அறிவித்திருந்தது.

நகர கவுன்சிலர் மைக்கல் பேரார்டிநெட்டி,மற்றும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான லொரன்சோ பேரார்டிநெட்டி ஆகியோருடன் வைன் மற்றும் குணரட்னம் ஆகியோர் கந்தசாமி இந்துக் கோவிலில் நடந்த அறுவடை காலத்தை கொண்டாடும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்கள்.

என்.சி.சி.ரி பலத்தை வெளிக்காட்டுகிறது

குணரட்னம் மிகவும் செல்வாக்குள்ள ஒரு என்.சி.சி.ரி பிரதிநிதியாக உயாந்துள்ளார். இன்று கனடாவில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த புலம்பெயர் அமைப்பாக என்.சி.சி.ரி பரவலாக நம்பப் படுகிறது. 2015ல் நடக்கவுள்ள அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதிநிதித்துவத்தை பெறக்கூடிய ஒரு குழுவாக இது உள்ளது. இந்தக் குழுவின் மூலோபாயம் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பாதுகாப்பதுடன், ஸ்ரீலங்கா வம்சாவழி கனடியர்களான சிலரை அடுத்த தேர்தலில் தொகுதிகளை வெல்ல வைப்பதையும் இலக்காக கொண்டது.

தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் முன்னணியில், ஸ்ரீலங்காவுக்கு எதிரான பிரச்சாரம் என்.சி.சி.ரி க்கு தனது அதிகாரத்தை ஒருமுகப்படுத்தவும் மற்றும் அதன் தலைமையை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்களுக்கு குழி பறிக்கவும் உதவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான, யாழ்ப்பாணத்தில் பிறந்த ராதிகா சிற்சபைஈசன், மார்ச் 2,2013;ல் ஜெனிவா கூட்டத் தொடரின் புறத்தே தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் என்.சி.சி.ரி யின் சீற்றத்துக்கு ஆளாகியிருப்பவர்களில் ஒருவராவார். அவரது செய்கையால் ஆத்திரமடைந்த என்.சி.சி.ரி தலைமை, மார்க்கம் கவுன்சிலரான லோகன் கணபதியை அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வைத்தது. எல்.ரீ.ரீ.ஈ குழுவினர் இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டாட்சி தொகுதியான ஸ்குரொபரோ வடக்கில் அடுத்த தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளராக கணபதியை முன்னிறுத்த முயல்கிறது.

கடந்த ஜனவரியில் ஸ்ரீலங்காவுக்கு தான் விஜயம் செய்தபோது ஸ்ரீலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் தன்னை வீட்டுக் காவலில் வைத்ததாக போலியான குற்றச்சாட்டைகூறி சர்வதேச ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா சிற்சபைஈசனுடன் மோத உள்ளார். மற்றொரு ஸ்ரீலங்கா வம்சாவழி கனடியரான சமகால அரசியல்வாதியாக உள்ளவர், ரி.யு.எல்.எப் ஆனந்தசங்கரியின் மகன் காரி ஆவார், அவரும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவதுடன் லிபரல் கட்சியின் வேட்;பு மனுவின்மீது, கண் வைத்துள்ளார். (கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா தனது யாழ்ப்பாண அரங்கம் காரணமாக சுடு நீரில் விழுந்து தத்தளிக்கிறார், த ஐலன்ட் ஜனவரி 3, 2014, செய்தி)

சுவராஸ்யமானதாக கணபதி கன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் பற்ரிக் பிறவுண் மற்றும் லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் காறிகியானிஸ் ஆகியோருடன் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்து ஜெனிவாவில் இணைந்துள்ளார்;.

2013 மே 18ல் இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டவர்களுக்காக ரொன்ரோ குயின்ஸ் பார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ராதிகா கலந்து கொள்வதை தடுக்கும் அளவுக்கே என்.சி.சி.ரி சNeru Gunaratnam-1ென்றுவிட்டது.

புதிய ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப் படும் வகையில் ஒரு வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு எதிராக நாசவேலை செய்வதை தடுத்து மீண்டும் எல்.ரீ.ரீ.ஈ குழுவினருடன் தொடர்பு கொள்வதற்கு வசதியாக தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக தனது ஸ்ரீலங்கா விஜயத்தை (2013 டிசம்பர் பின்பகுதி மற்றும் 2014 ஜனவரி ஆரம்பம்) பயன்படுத்திக் கொண்டார். ராதிh சிற்சபைஈசன் 2011ல் முதல்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். கன்சர்வேட்டிவ், லிபரல் போல. புதிதாக தோன்றியுள்ள புதிய ஜனநாயகக் கட்சிக்கும் புலம்பெயர்ந்தோரின் ஆதரவு வாக்குகளைப் பெறுவதற்கு தயக்கமின்றி ஸ்ரீலங்காவை எதிர்ப்பதை தவிர வேறு வழியில்லை. அமெரிக்காவினது தலைமையில் அதனது கூட்டணியினரால் இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ள பிரேரணைக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் ஓட்டத்தில் ஸ்ரீலங்காவுக்கு பலத்த அடி கொடுப்பதுதான் கனடிய அரசியல் கட்சிகளை தமிழ் வாக்காளர் மத்தியில் பிரியமானவையாக்கும்.

கனடாவில் மனித உரிமை பேராளிகள் மற்றும அரசியல் ஆர்வலர்கள் என்கிற போலி வேடத்திலுள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களை ஸ்ரீலங்கா வெளிப்படுத்த வேண்டும். அவர்களது இருப்பை அரசாங்கம் இன்ரர்போலின் கவனத்துக்கு கொண்டு வரலாம், அதேபோல வெளியுறவு அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள கனடிய உயர் ஸ்தானிகர் ஆகியவற்றிடமும் இந்த விடயத்தை எடுத்துச் செல்லவேண்டும்.

பரஞ்சோதி விவகாரம்

இங்கு பிரிவினைவாத உணர்வுகளை தூண்டிவிடுபவர்கள் அதிக அளவில் கனடிய அரசியல் கட்சிகளில்; ஊடுருவ முடிந்தது. இதற்கு 2011 மே, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் நியமனத்தைபெற்ற ஸ்ரீலங்கா வம்சாவழி கனடியரான கவான் பரஞ்சோதியை தவிர வேறு சிறந்த உதரணம் கிடையாது. , தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா வம்சாவழி கனடியரான இருவர் மத்தியில் பரஞ்சோதி இருந்தார். தனது பந்தயத்தில் பரஞ்சோதி தோற்றுவிட்டாலும்,புதிய ஜனநாயகக் கட்சியின் நியமனத்தை பெற்றுக்கொண்ட ராதிகா சிற்சபைஈசன் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிட்டார்.

ஆனால் இதில் பரஞ்சோதிக்கு உள்ள விசேஷம் என்னவன்றால் அவருக்கு கேபி என்கிற குமரன் பத்மநாதனுடன் இருந்த உறவுதான். இந்த எழுத்தாளர்; ஜூலை 2011ல் நடத்திய ஒரு பிரத்தியேக நேர்காணலில் கேபி, மலேசிய பாதுகாப்பு முகவர்கள் 2010 ஆகஸ்ட் 3ல் தன்னை சுற்றி வளைப்பதற்கு முன்னர் கடைசியாக தன்னுடன் தொலைபேசியில் உரையாடியவர் பரஞ்சோதிதான் என்று சொல்லியிருந்தார். கேபி அப்போது கோலாலம்பூரில், 316,ஜலான் துங்கு அப்துல்ரகுமான் வீதியில் அமைந்துள்ள பெஸ்ட்; டியுன் ஹோட்டலில் தங்கியிருந்தார். மலேசிய திடீர் சோதனையின்போது, 2009 மே 19ல் நந்திக் கடலேரியின் கரைகளில் பிரபாகரன் கொல்லப்பட்டதை தொடர்ந்து கேபி எல்.ரீ.ரீ.ஈக்கு பொறுப்பாக இருந்தார். தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தன்னை கடைசியாக அழைத்தவர் பரஞ்சோதி என்று கேபி சொல்லியிருந்தார். (கனடா தேர்தல்கள்: கேபியின் கைதுக்கு முன் அவரை கடைசியாக அழைத்த நபர் இப்போது களத்திலுள்ளார், த ஐலன்ட் ஏப்ரல் 20,2011.)

நோர்வேயிலுள்ள நெடியவன் உட்பட உயர்மட்ட புலம்பெயர் பிரதிநிதிகளுடன் பரஞ்சோதி தொடர்புகளைக் கொண்டிருந்தாலும் அவர் நிச்சயமாக நேரு குணரட்னத்தின் வகையை சேர்ந்த ஒருவரல்ல. கனடிய செயற்பாடுகளுக்கு முக்கிய குழுவான என்.சி.சி.ரி, சர்வதேச தமிழ் ஈழச் சபை, போன்ற மற்றும் சிலவற்றை உள்ளடக்கிய கூட்டமைப்புக்கு குணரட்னம் இப்போது ஒரு முக்கிய தலைவர். இந்த குழு, உலகத் தமிழர் பேரவையிலிருந்து தன்னை தூரப்படுத்திக்கொண்ட பிரித்தானிய அமைப்பான, பிரித்தானிய தமிழர் பேரவையுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ யினை முற்றாக அழித்த பின்னர் புலம் பெயர் குழுக்கள் பிரதானமாக வலுவடைந்து வருகின்றன, ஏனென்றால் எந்த அரசியல் கட்சியுடனும் எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவப் பிரிவின் மேற்பார்வையின்றி அவர்களுக்கு நெருக்கமாக பணியாற்றும் சுதந்திரம் உள்ளது என்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் உணரவேண்டும்.

செப்ரம்பர் 2012ல் ஐநா பொதுச் சபையில் ஸ்ரீலங்காமீது கனடா தாக்குதல் தொடுத்ததுக்கு தற்பொழுது ஆட்சியில் உள்ள கன்சர்வேட்டிவ் அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈ உடன் கொண்டுள்ள தொடர்பே காரணம். ஐநா பொதுச் சபையில், மார்ச் 2012ல் ஐநா மனித உரிமைகள் சபை அமர்வின்போது, ஸ்ரீலங்காவின் எல்.எல்.ஆர்.சி நடவடிக்கைகள் பற்றி ஒரு ஊடாடும் உரையாடலை முறைப்படுத்த வேண்டும் என்ற உரிய காலத்துக்கு முந்திய ஒரு பிரேரணைக்குப் பிறகு, கனடிய வெளியுறவு அமைச்சர் பெயார்ட் விரோதமான முறையில் நடந்து கொண்டார். ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் பேராசிரியர்.ஜி.எல் பீரிஸ் தற்போதைக்கு கனடாவின் பிரேரணை நிறுத்திவைக்கப்படுகிறது என உறுதிமொழி வழங்கியும் அதைபொருட்படுத்தாமல் அமைச்சர் பெயார்ட் ஐநா பொதுச் சபையில் ஸ்ரீலங்காவைப் பற்றி தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார். ஐநாவுக்கான ஸ்ரீலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோகன்ன ஸ்ரீலங்காவின் செலவில் தனது நாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயினரை திருப்திப் படுத்துகிறார்கள் என்று உடனடியாக கனடாமீது குற்றம் சாட்டினார்.

ஸ்ரீலங்காமீது இயக்கப்படும் கனடிய திட்டத்தைப் பற்றி ஸ்ரீலங்கா மறுபரிசீலனை செய்வது அவசியம். அடுத்த பாராளுமன்ற தேர்தலுடன் புலம்பெயர் சமூகம் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும், அதற்கிடையில் ஸ்ரீலங்கா தாமதமின்றி கள யதார்த்தங்களை நன்றாக ஆய்வு செய்வது அவசியம்.

தொடரும்

தேனீமொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com