Thursday, February 6, 2014

குருதி உறையாமல் பாதுகாக்க மீன்களைப் பயன்படுத்தலாம்!

மீன்களை பயன்படுத்தி குருதி உறைதலைத் தவிர்க்கும் முறையினால் இரத்த வங்கிகளில் ஏற்படும் குருதித் தட்டுப்பாட்டினை தவிர்க்க முடியும் என்ற புதிய வழிமுறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது இரத்த வங்கியில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அதிகமாக 42 நாட்கள் உறையாது பேணப்படுகின்றது என்பதுடக் இது தவிர்ந்த ஏனைய முறைகள் அதிக செலவுமிக்கவை இதே வேளை குறித்த சில காலங்களில் இரத்தம் வழங்குபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து செல்வதனால் குருதித் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

எனவே பூச்சியத்துக்கும் குறைந்த வெப்பநிலையில் உறைபனி கடல்களில் வாழும் மீன்கள் தங்களது இரத்தம் உறையாமல் வாழ்கின்றன எனவே இதனையே இரத்த வங்கியில் குருதி உறையாமல் இருப்பதிலும் பயன்படுத்தவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது உறைபனி கடல்களில் வாழும் 'ஆர்க்டிக் கொட்' போன்ற மீன்களில் உறைதலைத் தடுப்பதற்கான புரதங்கள் உள்ளன எனவே இதனையே பிரதானமாகக்கொண்டு குருதியினை நீண்ட காலம் உறையாமல் பாதுகாக்கலாம் என மேற்படி ஆய்வினை மேற்கொண்டுள்ள வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com